சென்னை,
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல அணிகளின் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் காயம் மற்றும் பிற காரணங்களால் விலகியுள்ளனர். சுமார் 9 வீரர்கள் தொடக்கப் போட்டிகளில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியில் இருந்து நாதன் எல்லிஸ் தொடை தசை காயம் காரணமாக முழு சீசனிலிருந்தும் விலகியுள்ளார். கொல்கத்தா அணியில் ஹர்ஷித் ராணா மற்றும் பதிராணா காயம் காரணமாக விலகியுள்ளனர். இதில் ராணா முழு சீசனையும் தவறவிடுவார் என கூறப்படுகிறது.
மேலும் ராஜஸ்தான் அணியின் சாம் கரன் காயம் காரணமாக முழு சீசனிலிருந்தும் விலகியுள்ளார். அதேபோல் ஐதராபாத் அணியில் ஜாக் எட்வர்ட்ஸ் முழு சீசனிலிருந்து விலகியுள்ளதுடன், பேட் கம்மின்ஸ் தொடக்கப் போட்டிகளை தவறவிடுவார் என தெரிகிறது.
பஞ்சாப் அணியின் பெர்குசன் மற்றும் டெல்லி அணியின் ஸ்டார்க் ஆகியோரும் ஆரம்பப் போட்டிகளை தவறவிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயத்திலிருந்து மீண்டு வருவதால் தொடக்கப் போட்டிகளை தவறவிடுவார் என தெரிகிறது.
