நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை… முதற்கட்ட பயணத்திட்டம் வெளியானது! – 2026 legislative assembly elections the first phase travel schedule for ntk

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளுக்கு நாள் பரபரப்புடன் இயங்கி வருகின்றது. திமுக அதன் கூட்டணி கட்சிகள் அதிமுக பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முறை போட்டியே வலுவடைந்து வருகிறது.

இந்த சூழலில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வேலைகளில் மிகவும் பரபரப்பாக ஈடுபடுத்த துவங்கி இருக்கின்றனர். தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் விருப்ப மனு நேர்காணல் என திமுக ஒரு பக்கம் பிசியாக இறங்கி வருகிறது. அதிமுகவும் தேர்தலுக்கான குழுக்களை அமைத்து பிரச்சார வேலைகளில் ஈடுபடுவதோடு தொகுதி பங்கீடு குறித்து பாஜக மேல் இடத்தில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயும் சமீபத்தில் போட்டியிட விரும்பு ஓரிடம் விருப்பமான நேர்காணலை நடத்தி முடித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் செயல் திட்டம்

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் தனது தேர்தல் வேலைகளில் துவங்கி இருக்கிறது. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் நடந்த நாம் தமிழர் மாநாடு பல்வேறு வரவேற்புகளை பெற்றது. அதற்கு முன்பு ஏற்கனவே சீமான் நடத்திய மரங்களின் மாநாடு, மாடுகளின் மாநாடு, கடல் அன்னை மாநாடு உள்ளிட்ட சுற்றுப்புறச் சூழல் சார்ந்த மாநாடுகள் மக்களிடையே கவனத்தைப் பெற்றன.
தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து நகர்ந்து வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக தேர்தலில் களம் கண்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாது 17 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய சீமான் எல்லா தேர்தலையும் தனித்தே போட்டியிட்டார்.
இதுவரை நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எட்டு சதவீத வாக்குகளை பெற்ற மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இந்த சூழலில்தான் நாம் தமிழர் கட்சியும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் வேலைகளையும் கட் செய்துவிடும் என்று இயங்கி வருகிறது.
ஏற்கனவே தேர்தல் செலவுக்காக மக்களிடமிருந்து திறள்நிதி கேட்டு நாதக நினைப்பாளராக காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் அவர் தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழலில் தான் வருகிற 23 -ஆம் தேதி முதல் திருத்தணியில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடங்க உள்ளார்.
அதற்கான முதல் கட்ட பரப்புரை பயணத்திட்டம் வெளியாக இருக்கிறது. மார்ச் 23ஆம் தேதி திருத்தணியில் பரப்புரையை தொடங்கும் சீமான் மார்ச் 25ஆம் தேதி ஐந்து இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். கிருஷ்ணகிரி, சூளகிரி,பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், உள்ளிட்ட இடங்களில் அன்றைய தினம் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
அடுத்ததாக 26 -ஆம் தேதி மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் பரப்புரை மேற்கொள்ள வருகிறார். மூன்றாவது நாளாக சங்கராபுரம் திருக்கோவிலூர் திருவண்ணாமலை சேத்துப்பட்டு வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

மார்ச் 28 -ஆம் தேதி காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் சீமான் தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க இருக்கிறார்கள். முதற்கட்டமாக நடைபெறும் இந்த தேர்தல் பரப்புரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது.

Source link