கோயம்பேடு மார்க்கெட்: ஜூலை கடைசி வாரம், காய்கறி விலையில் ஏற்றம்- தக்காளி ரூ.12, வெங்காயம் ரூ.40, கேரட் ரூ.120 – koyambedu market vegetable price up to july 2026 last week till 31st

சென்னையில் உள்ள முக்கியமான காய்கறி மார்க்கெட்டான கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதுவு ஜூலை கடைசி வாரத்தில் இப்படியான நிலையை பார்க்க முடிகிறது. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விலைவாசி ஏறியதா, இறங்கியதா என பொதுமக்கள் தினசரி அப்டேட் கேட்டு வருகின்றனர். இதுபற்றி எஸ்.எஸ்.முத்துக்குமார் அவர்களிடம் சமயம் தமிழ் சார்பாக பேசினோம். இவர் கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவராக இருக்கிறார். ஜூலை மாதம் இன்னும் 3 நாட்களில் முடிவுக்கு வருகிறது. கடைசி வாரத்தில் இருக்கிறோம்.

தக்காளி விலை சரிவு, வெங்காயம் விலை உயர்வு

தற்போதைய நிலவரம் குறித்து பதிலளிக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை குறைவாக இருந்தது. இந்த வாரத்தை பொறுத்தவரை விலைவாசி தொடர்ச்சியாக ஏறி வருகிறது. வெங்காயம் கிலோவிற்கு 5 முதல் 10 ரூபாய் வரை ஏறியிருக்கிறது. தக்காளி 10 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. ஒரு கிலோ வெறும் 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார். மேலும் முக்கியமான காய்கறிகளின் பட்டியலை பகிர்ந்து கொண்டார்.

வெயில்ல சாப்பிடவேண்டிய காய்கறிகள் என்னென்ன?

கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் ரூ.80

தக்காளியை பொறுத்தவரை முதல் தரம் 12 ரூபாய், இரண்டாம் தரம் 8 ரூபாய், மூன்றாம் தரம் 5 ரூபாய்க்கும், நவீன தக்காளி 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெங்காயம் முதல் தரம் 40 ரூபாய், இரண்டாம் தரம் 38 ரூபாய் எனவும், கர்நாடகா வெங்காயம் முதல் 26 ரூபாய், இரண்டாம் தரம் 24 ரூபாய் எனவும் விற்பனை செய்கின்றனர். சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு கோயம்பேட்டில் விற்கின்றனர். இதன் அடுத்தடுத்த ரகங்களை பொறுத்தவரை 75 ரூபாய், 60 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை 28 – கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை பட்டியல்

காய்கறி விலை [ரூபாயில்] ஊட்டி கேரட் 120/ 110/ 100 மலூர் கேரட் 55/ 50 பீன்ஸ் 90/ 80/ 70 ஊட்டி பீட்ரூட் 40/ 30 கர்நாடகா பீட்ரூட் 35/ 30 முள்ளங்கி 35/ 30 முட்டைக்கோஸ் 30/ 25 வெண்டைக்காய் 40/ 35 உஜாலா கத்திரிக்காய் 50/ 40 வரி கத்திரிக்காய் 35/ 30 புடலங்காய் 30/ 20 சுரக்காய் 25/ 15 சேனைக்கிழங்கு 50/ 40 முருகைக்காய் 30/ 20 சேமக்கிழங்கு 20/ 15 காலிபிளவர் 40/ 25 வெள்ளரிக்காய் 25 மிளகாய் 30 பச்சை மிளகாய் 70/ 60 பட்டாணி 150/ 145 இஞ்சி 200/ 180/ 100 பூண்டி 250/ 160/ 130 அவரைக்காய் 80/ 70 மஞ்சள் பூசணி 18/ 15 வெள்ளை பூசணி 25 கொத்தவரங்காய் 30/ 25 பீர்க்கங்காய் 50/ 40 வாழைக்காய் 18/ 15 வாழைத்தண்டு 35/ 30 குடைமிளகாய் 50/ 40 வண்ண குடைமிளகாய் 180 கொத்தமல்லி, புதினா 10 கருவேப்பிலை 25 மாங்காய் 30/ 25 பொள்ளாச்சி தேங்காய் 55/ 50 உடுமலைப்பேட்டை தேங்காய் 52

Source link