சென்னை,
அடவிநயினார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உத்தரவு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால்வாய், பண்பொழிகால்வாய், வல்லாக்குளம்கால்வாய், இலத்தூர்கால்வாய், நயினாரகரம்கால்வாய், கிளங்காடுகால்வாய், கம்பிளிகால்வாய், புங்கன்கால்வாய் மற்றும் சாம்பவர்வடகரை கால்வாய் ஆகியவற்றின் நேரடிப் பாசன நிலங்களுக்கு 29.07.2026 முதல் 31.10.2026 வரை 95 நாட்களுக்கு அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 60 கன அடி வீதம் 268.43 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் தென்காசி மாவட்டம், செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள 2147.47 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
