‘செம்ம ஐடியா’ – வெளிநாட்டு பிட்சிகள், இந்திய பேட்டர்கள் சொதப்பாம இருக்க, பிசிசிஐ இத பண்ணனும்: கவாஸ்கர் டிப்ஸ் – sunil gavaskar explains why indian batter not playing well in overseas

ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ச்சியாக காட்டடி அடித்த பேட்டர்களுக்கு, அடுத்து அயர்லாந்து டி20 தொடர், இங்கிலாந்து டி20 தொடரில் இடம் இடைத்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இத்தொடர்களில் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி, அதில் ஒரு வெற்றியைக் கூட இந்திய அணி பெறவில்லை.

இதனால், இந்திய டி20 அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது. இந்தியாவில், பிளாட் பிட்சில், குறைந்த பவுண்டரி தூரத்தில், அதிரடி காட்ட மட்டுமே இந்திய அணி லாயக்கு என பலரும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டு பிட்ச்களிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கியுளார்.

அதுகுறித்துப் பேசிய சுனில் கவாஸ்கர், ‘‘இந்திய பேட்டர்கள், பிளாட் பிட்சில், குறைந்த பவுண்டரி தூரம் இருக்கும் பிட்ச்களில் அதிரடி காட்ட மட்டுமே லாயக்கு என்ற விமர்சனம், தற்போது பெரிய அளவில் எழ ஆரம்பித்துள்ளது. அதற்கு ஏற்ப, இந்திய பேட்டர்களும் வெளிநாட்டு பிட்ச்களில் தொடர்ச்சியாக சொதப்புகிறார்கள். இந்தியாவில், பந்தை சரியாக அடிக்கவில்லை என்றாலும், அந்த பந்து சிக்ஸருக்கு செல்கிறது. இதே வெளிநாட்டு பிட்சிகளில், பந்தை சரியாக அடிக்கவில்லை என்றால், கேட்ச்தான் ஆகிறது’’ எனக் கூறினார்.

மேலும் பேசிய கவாஸ்கர், ‘‘இந்திய அணியினர் வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், பிசிசிஐ ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். அதாவது, பவுண்டரி லைன் தூரத்தை அதிகரிக்க வேண்டும். பவுண்டரி ரோப்பிற்கு அடுத்து, நிறைய இடங்கள் இருக்கிறது. குறிப்பாக, LED திரைக்கு பின்னாலும் அதிக இடம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, பவுண்டரி லைனை, ஏன் அதிகரிக்க முடியவில்லை’’ என கேள்வி எழுப்பினார்.

அடுத்து வரும் உலகக் கோப்பைகள் குறித்துப் பேசிய கவாஸ்கர், ‘‘அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவிலும், அடுத்த டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவிலும் நடக்க உள்ளது. அங்கு, பிளாட் பிட்ச்கள் கிடையாது. பவுண்டரிகள் தூரம் அதிகமாக இருக்கும். ஆகையால், இதற்கு சரியான முறையில் தயாராக வேண்டும் என்றால், இந்திய மண்ணிலும், பவுண்டரி தூரத்தை அதிகரிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு பிளாட் பிட்சகளை தயாரிப்பதை நிறுத்த வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.

ஸ்பின்னர்கள் குறித்துப் பேசிய கவாஸ்கர், ‘‘இந்தியாவின் பிளாட் பிட்ச், பவுண்டரி தூரம் குறைவு என்பதால், ஸ்பின்னர்கள் அதிக வேகத்தில் பந்துவீச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதே இங்கிலாந்து ஸ்பின்னர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அடில் ரஷித், வில் ஜாக்ஸ் ஆகியோரும் இந்திய ஸ்பின்னர்களைவிட 8-10 வேகம் குறைவாக வீசுகிறார்கள். இந்தியாவிலும் பிட்ச் பிளாட்டாக இல்லாமல், பவுண்டரி தூரம் அதிகமாக இருந்தால், இந்திய ஸ்பின்னர்களால், குறைந்த வேகத்தில் பந்துவீசி தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’’ எனக் கூறினார்.

சுனில் கவாஸ்கர் கூறும் ஆலோசனை, மிகச்சரியானது. இந்தியாவின், தற்போதைய இளம் வீரர்கள், பிளாட் பிட்சில், ஓங்கி ஓங்கி அடித்துவிட்டு, வேகத்திற்கு சாதகமான பிட்ச்களிலும் ஓங்கியடிக்க முற்பட்டு, கேட்ச் ஆகிறார்கள். குறிப்பாக, எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். அதேநேரத்தில், இந்தியாவில் ஐபிஎல் விளையாடி பழக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள், இந்திய காலநிலையை சரியாக கணித்து விளையாடி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link