ராமதாஸ் வி.கே.சசிகலா கூட்டணி, தேர்தல் களத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் எடப்பாடிக்கும் அன்புமணிக்கு எதிர்மறையான விளைவுளை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.
2021 -ஆம் ஆண்டு திமுக ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்பது மிக எளிதில் கணிக்கப்படக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனா 2026 கணிக்கவே முடியாத ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது. கடந்த காலங்களில் பலம் பொருந்தியவர்களாக இருந்த இரண்டு பேர் தற்போது தங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட பின்பும் அரசியலில் தனித்துவிடப்பட்ட பின்பு கூட்டணி வைத்திருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட வி.கே.சசிகலா தற்போது அஇபுதமமுக என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். 2017 -ஆம் ஆண்டு சிறை சென்ற பிறகு அதிமுகவில் தனது செல்வாக்கை ஒட்டுமொத்தமாக இழந்தார் சசிகலா அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் கட்சி சென்றது. சசிகலா எவ்வளவு முயற்சித்தும் அதிமுக கட்சியில் அவரால் நுழையவே முடியவில்லை. மேலும் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசலால் சசிகலாவால் இந்திய கூட்டணி குழு நுழைய முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. என்னால் சசிகலா அரசியலில் தனித்து விடப்பட்டதாக சொல்லப்பட்டது.
இதற்கிடையில் இன்னொரு போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியில் நடக்க தொடங்கியது. வட தமிழகத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி தற்போது இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது அன்புமணியை செயல்தலைவர் ஆக்கியதற்கு பிறகு ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக நிறுவனர் ராமதாஸ் பல்வேறுகட்ட குற்றச்சாட்டுக்களை அன்புமணி மீது சுமத்தி இருந்தார். பிரச்சனை பூதாகரமாக வெடித்து கட்சியே உடைந்தது. இதில் அன்புமணி தரப்பு பாமக எனவும் ராமதாஸ் தரப்பு பாமக எனவும் இரண்டு அணிகளாக தற்போது செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில்தான் கட்சியின் கொடி, சின்னம், பெயர், அனைத்தும் தேர்தல் ஆணையங்களின் தரவுகளின் அடிப்படையில் அன்புமணியிடம் இருக்கிறது. இதனை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆனால் தற்சமயம் அன்புமணியை தரப்பு பாமக, அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து விட்டது. இதனால் ராமதாஸ் கட்சியும் இன்றி சின்னமும் இன்றி தவித்து வருவதாக சொல்லப்பட்டது. ராமதாஸும் ஏதோ ஒரு கட்டத்தில் அரசியலை தனித்துவிடப்பட்டார் என்ற பேச்சுக்கள் என்னென்ன ஆனால் ராமதாஸ் நிச்சயம் புது கூட்டணி ஒன்றை அமைப்போம் என செய்தியாளர் இடையே பேசி வந்தார்.
சசிகலா ராமதாஸ் இணைவு
இதற்கிடையில்தான், நேற்றைய தினம் தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்த வி.கே சசிகலா ஒரு மணி நேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ராமதாஸ் தரப்பும் சசிகலா தரப்பும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்திருந்தனர்.
‘இந்த கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தும்’
இந்த சூழலில்தான் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் எங்களின் இந்த கூட்டணி நிச்சயம் தேர்தலில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பேசி இருந்தார். இந்த கூட்டணி அமைந்ததற்கு பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. சசிகலாவும் ராமதாசும் அரசியலில் தனித்துவிடப்பட்ட காரணத்தால்தான் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாகவும் விமர்சித்து இருந்தனர்.மேலும் அன்புமணியும் எடப்பாடி பழனிச்சாமியும் இந்த கூட்டணி “நகைப்புக்கு உரியதாக இருப்பதாகவும்” விமர்சித்து இருந்தனர். ஆனால் இதற்கு பின்னணியில் மிகப்பெரிய தேர்தல் வியூகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
40+ 30 வியூகம்..
ராமதாஸுக்கு வட மாவட்டங்களில் நல்ல செல்வாக்குண்டு மேலும் 40 தொகுதிகளில் வன்னியர் வாக்குகள் அதிக அளவில் புரளுவதால் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கக்கூடிய ஒரு கட்சியாக இன்றளவும் பாமக தொடர்கிறது.
ஆனால் அன்புமணி தரப்பு ராமதாஸ் தரப்பு என இரண்டு அணிகளாக உடைந்ததால் அந்த எண்ணிக்கை ஏற்கனவே குறைந்திருக்கிறது. மேலும் தன்னிடமிருந்து கட்சியை பறித்ததற்காக அன்புமணியின் வாக்குகளை உடைக்கும் ஒரு வியூகமாகவும் இதை பார்க்கலாம் என்கின்றனர். ராமதாஸும் அன்புமணியும் எதிரெதிரில்ன் நின்று தேர்தலை சந்திக்கும்போது அது நிச்சயம் அன்புமணிக்குதான் பின்னடைவை ஏற்படுத்தும். இவர்களின் இந்த கூட்டணி வெல்லுமா என்ற கேள்வியை விட யாருக்கு அதிக அளவிலான தாக்கத்தையும் பாதிப்பும் ஏற்படுத்துகிறது என்ற கேள்வியே முக்கியம்.
அடுத்ததாக தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற சசிகலாவுக்கும் சாதியப் பின்புலத்தின் மூலம் கிடைக்கக்கூடிய வாக்குகள் இருப்பதால் 30 தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அதன் அடிப்படையில் அந்த வாக்குகளை உடைக்கும் போது அது அதிமுகவையும் தினகரனையும் பலவீனப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்த தேர்தல் வியூகத்தை முன்னிட்டு இந்த கூட்டணி அமைக்கப்பட்டதாகவும் இப்போது நகைப்புக்கு உள்ளதாக தோன்றும் விஷயங்கள் பிற்காலத்தில் வலியை கொடுக்கும் எனவும் சில விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
யாருக்கு லாபம்?
உண்மையில் இந்த கூட்டணி திமுக அல்லது தமிழக வெற்றி கழகம் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு தான் லாபம் சேர்க்க போவதாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த கூட்டணி அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம், ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலே திமுக வட மாவட்டங்களில் இருந்து வன்னியர் வாக்குகளை ஓரளவு தன் பக்கம் வைத்து இருக்கிறது. இந்த சூழலில் ராமதாஸ் அன்புமணிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் போது மீதம் இருக்கும் வாக்குகள் நிச்சயம் திமுக பக்கம் செல்லும், ஆனால் களத்தில் தற்போது விஜயும் நிற்பதால் அந்த நிலை மாறி இருக்கிறது. ஆனால் மாற்று சக்தி வேண்டும் மாற்று அரசியல் வேண்டுமென விரும்பக்கூடிய நபர்கள் விஜய்க்கு வாக்களிக்கும் வாய்ப்பு இருக்கிறது எனவே வி கே சசிகலா ராமதாஸ் இணைவு திமுக, தவெக -விற்கு பல பலன்களை தரும் என்கின்றனர் சில விமர்சகர்கள்.
