இன்றைய ராசிபலன் (29.07.2026): நீண்ட நாள் எண்ணிய காரியம் நிறைவேறும் நாள்..!

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : புதன்கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆடி மாதம்

நாள் : 13

ஆங்கில தேதி : 29

மாதம் : ஜூலை

வருடம் : 2026

நட்சத்திரம் : இன்று மாலை 05.08 மணி வரை உத்திராடம், பின்னர் திருவோணம்.

திதி : இன்று இரவு 08.58 மணி வரை பௌர்ணமி, பின்னர் பிரதமை.

யோகம் : அமிர்த, சித்த யோகம்.

நல்ல நேரம் காலை: 09. 15 – 10.15

நல்ல நேரம் மாலை: 04.45 – 05.45

ராகு காலம் : நண்பகல் 12.00 – 01.30

எமகண்டம் : காலை 07.30 – 09.00

குளிகை : காலை 10.30 – 12.00

கௌரி நல்ல நேரம் காலை : 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் மாலை: 06.30 – 07.30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்.

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று புதிய முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு மனநிறைவை தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்

வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் எதிர்காலத் தேவைக்காக சேமிப்பை அதிகரிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உற்சாகத்தை அதிகரிக்கும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். முதலீடுகளில் நிதானம் அவசியம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை ஒத்திவைப்பது சிறந்தது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். இறை வழிபாடு மன அமைதியைத் தரும். உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

கடகம்

இன்றைய நாள் அமைதியும் முன்னேற்றமும் இணைந்த நல்ல நாளாக அமையும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பால் முக்கிய பணிகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெறலாம்.

பணியிடத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நீண்ட நாள் எண்ணிய காரியம் நிறைவேறும். பொருளாதாரம் சீராக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

சிம்மம்

அலுவலகத்தில் வேலை பளுகள் இருந்தாலும் அதனை எளிதாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் விலகி நல்லிணக்கம் உருவாகும்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

கன்னி

உங்கள் பேச்சுத் திறன் பலரையும் கவரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

காதலர்களிடையே ஊழல்கள் ஏற்பட்டு பின்பு இணைவர். இன்றைய நாள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதிர்கால முன்னேற்றத்திற்கு நல்ல பாதையை உருவாக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம்

இன்று உங்கள் உள்ளுணர்வும், அமைதியான அணுகுமுறையும் பல நன்மைகளைப் பெற்றுத் தரும். நீண்ட நாள் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.தம்பதிகளுக்கிடையே பாசமும் புரிதலும் மேலும் வலுப்பெறும்.

பிள்ளைகளின் சாதனைகள் மனதில் பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். மாணவர்கள் கவனத்துடன் செயல்பட்டால் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விருச்சிகம்

நீங்கள் தொடங்கும் காரியங்களில் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றியை நோக்கி நகர்வீர்கள். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தேக ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

தம்பதிகளுக்கிடையே நெருக்கமும் புரிதலும் மேலும் வலுப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தும்.

வெளியூர் பயண முயற்சிகள் வெற்றி பெறும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மகரம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை நடைபெறும். பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயரும். பொருளாதாரம் வலுப்பெறும். புதிய திட்டங்களை செயல்படுத்த நல்ல நாள். ஆன்மிக சிந்தனை மன அமைதியை அளிக்கும்.மாணவர்கள் கவனத்துடன் செயல்பட்டால் கல்வியில் சிறப்பான சாதனைகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கும்பம்

மருந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மன அமைதிக்காக தியானம் அல்லது இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.மாணவர்கள் கவனத்துடன் செயல்பட்டால் கல்வியில் சிறப்பான சாதனைகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மீனம்

பணவரவு சீராக இருந்தாலும் எதிர்காலத் தேவைக்காக சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தம்பதிகளிடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக ஈடுபாடு மன நிறைவை அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

Source link