இயக்குனர் காலித் ரகுமானின் 2019-ல் வெளியான ‘உண்டா’ திரைப்படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கலித் ரகுமான். உண்டா, லவ், தள்ளுமலாஎன அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து மலையாளத் திரைத்துறையின் முக்கியமான இளம் இயக்குநராக உள்ளார்.
இறுதியாக இவர் தயாரித்து இயக்கிய ‘ஆழப்புழா ஜிம்கானா’ திரைப்படமும் வெற்றிப்படமாகவே அமைந்தது. தற்போது, நடிகர்கள் மம்முட்டி, ‘கிஷ்கிந்தா காண்டம்’ புகழ் ஆசிப் அலி, ‘பிரேமலு’ புகழ் நஸ்லன் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய திரைப்படத்தை கலித் இயக்குகிறார்.
இந்த நிலையில், இப்படத்திற்கு, ‘மட்டஞ்சேரி மாபியா’ எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு
இயக்குனர் காலித் ரகுமான்- மம்முட்டி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தின் கதையை நியோக் கிருஷ்ணா, ஷராபு-சுஹாஸ் மற்றும் தஸ்ரீக் அப்துல் சலாம் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்
