சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக தொடர்ச்சியாக தவெக குறித்தும் விஜய்யையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் ஆர்.பி. உதயகுமார் . குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வரும் விவகாரத்தில் முதல்வரை கடுமையாக சாடி கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.பி. உதயகுமார், தேர்தல் தோல்விகள் பற்றியும் தவெக வெற்றி குறித்தும் பேசியுள்ளதும் கவனம் பெற்று வருகிறது.
இது சம்பந்தமாக அவர் பேசுகையில், ஓட்டு எண்ணும் போது பாதி இடத்துல விசிலுக்கு போகுது. நான் ஒன்றியத்தை பார்க்கிறேன். அவர் என்னை பார்க்குறார். செந்தில் நாதன் எல்லாம் தோற்குற வேட்பாளரா. இதை விட ஒரு வேட்பாளரை உங்களுக்கு கொடுக்க முடியுமா? இந்த பூத்துல 300 ஓட்டு எப்பவும் வருமேடான்னு கேட்டால், 150 உனக்கு. 150 விசிலுக்குன்னு சொல்றான். நம்ம எல்லாம் தெருமுனைக்கூட்டம், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், ஆர்த்தி எடுத்துட்டு இருந்தாங்க.
அடேங்கப்பா இந்த ஆரத்தி எடுக்கிற கொடுமை இருக்கே. 3 கிமீ போகனும். இங்க மொத்தமே ஆயிரம் ஓட்டு தானே இருக்குன்னு கேட்டால், மொத்த தொகுதிக்கும் 3 கிலோ மீட்டருக்கு ஆளுங்களை நிறுத்தி வைச்சு இருக்கான். நமக்கு செல்வாக்கு கொடிக்கட்டி பறக்குது. எடப்படியார் பக்கத்துல நம்மதான் நிற்க போறோம். பக்கத்துல உட்கார வைச்சு இருக்கார் பார்த்தால், அவர் கேட்கிறார் நிலவரம் எப்படின்னு போன்ல கேட்கிறார். சூப்பருன்னு சொல்றேன்.
செந்தில் நாதன்.. டாப்பா வந்துருவாரு அண்ணே. யப்பா இந்த சோழவந்தான்.. பிச்சுட்டு போயிடும் அண்ணன். உசிலம்பட்டி என்னப்பா.. பக்கத்துலயே எவனும் வர முடியாது அண்ணேன்னு சொல்றேன். அதுக்கப்புறம் ஓட்டு எண்ணிட்டு இருக்கோம். விசிலு விசிளுன்னு போறாங்க. என் பக்கதுல இருந்தவன்டா என்னதான் நடந்தது கேட்கிறேன். அவன் அண்ணே நம்ம ஆரத்தி எடுக்க போனோம். சாப்பாடு போட்டோம். கிரிக்கேத்ர் பேட் கொடுத்தோம்.
அப்பலாம் இவனுங்க வீட்ல உட்கார்ந்து ரீல்ஸ்லயே தட்டி இருக்கானுங்க அண்ணேன்னு சொல்றான். இந்த 41 நாள் விஜய் வெளியவே வரலைல, நாங்கெல்லாம் அவ்வளவு தான் முடிஞ்சுச்சு இவன் கதை அப்படின்னு நினைச்சுட்டு இருக்கோம். அதுக்கு உடனே மக்கள் என்ன நினைப்பாங்க. எதிர்க்கட்சிகள் எல்லாம் விமர்சனம் பண்றாங்க அப்பட்டின்னு ஒரு சிந்தனை பண்றானுங்க. உடனே வசனகர்த்தாவை கூப்பிட்டு எழுத சொல்றானுங்க.
அதை ரீல்ஸ் எடுக்குறானுங்க. விஜய் பேசுறார், என்னை வெளியே வரவில்லை என்று கேட்குறீங்க. எனக்கு எவ்வளவு மனவலி இருந்தது தெரியுமா? சிங்கம் வேடிக்கை பார்க்க வெளியே வராது. வேட்டையாட தான் வெளியே வரனும் என்று பேசுகிறார். இவனுங்களும் சூப்பர். அதுதான்டா நம்ம தலைவர்ன்னு கொண்டாடுறாங்க. இழவு வீட்டுக்கு போகாமல் ரீல்ஸ் போடுறார். அதுக்கு ஒருமணி நேரத்துல ஒரு கோடி பேர் லைக் போட்டு இருக்கான்.
எனக்கு நெஞ்சுவலியே வந்துடுச்சு. அட சண்டாளங்களா நாங்கெல்லாம் என்ன பேசுறது என புலம்பி தள்ளிவிட்டார் ஆர்.பி. உதயகுமார். தொடர்ந்து என்னடா இப்படி கொச்சையா பேசுறான்னு நினைக்காதீங்க மன்னிச்சுடுங்க. கட்டுன பொண்டாட்டி கூட இல்லை. பெத்த பிள்ளைங்களும் கூட இல்லை. நீ இன்றைக்கு நாட்டின் முதலமைச்சர். இந்த கொடுமையை எங்க போய் சொல்றது என கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் ஆர்.பி. உதயகுமார்.
