புதுச்சேரி,
30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் விஜய்யின் தவெக போட்டியிடுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிக்கிறார்.அதற்காக வேட்பாளர் தேர்வு கடந்த 16 ஆம் தேதி நடைபெற்று இறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் நாளை அறிவிக்கிறார் . அவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான 23ஆம் தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனர்.
