aadi month spiritual remedies ஆடி மாதத்தில் துன்பங்கள் விலக இந்த பரிகாரங்களை செய்ய மறக்காதீங்க

ஆடி மாதம், தட்சினாயண காலத்தின் துவக்க மாதமாகும். இந்த மாதத்தில் உலகியல் இன்பங்களை தவிர்த்து, ஆன்மீக செயல்பாடுகளில் முழுவதுமாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை காண முடியும் என சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் செய்யப்படும் பரிகாரங்களும், வழிபாடுகளும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். அதோடு அம்மனின் பரிபூரண அருளையும் பெற முடியும் என பக்தர்கள் நம்புகிறார்கள். ஆடி மாதத்தில் எந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்த கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் ஒவ்வொரு அற்புதமான பலனை தந்து, நம்முடைய துன்பங்கள் போக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகள் மட்டுமின்றி தானம், பரிகாரங்கள் ஆகியவையும் பல மடங்கு அதிக பலனை தரக் கூடியவை. நேர்த்திடன் நிறைவேற்றம் என்பவர்கள் கூட ஆடி மாதத்தில் அதை செய்வது மிகவும் விசேஷமானதாகும். ஆடி மாதத்தில் எந்த நாளில் என்ன பரிகாரம் அல்லது வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆடி மாதத்தில் உங்களால் எப்போதும் முடியும் அப்போது இந்த வழிபாடு அல்லது பரிகாரத்தை செய்து, அம்மனை மனதார வழிபடுங்கள். நிச்சயம் உங்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ஆடி மாதத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

* ஆடி வெள்ளி – ஆடி வெள்ளியில் தாமரை மலரால் மகாலட்சுமியை வழிபடுவது பொருளாதார முன்னேற்றம், புதிய வருமான வாய்ப்புகள், கடன் சுமை குறைதல், மன அமைதி கிடைக்கும்.
* ஆடி கிருத்திகை – கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆடி கிருத்திகை அல்லது அனைத்து மாதங்களிலும் வரும் கிருத்திகை நாளில் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். இப்படி வழிபடுவதால் தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், தைரியம் அதிகரிக்கும்.
* ஆடிப்பூரம் – ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளையல் மாலை சாற்றினால் குழந்தை பாக்கியம் உண்டாகும். அனைத்து நாட்களும் செய்ய முடியாவிட்டாலும் ஆடிப்பூரம், ஆடிவெள்ளி ஆகிய நாட்களில் இந்த வழிபாட்டினை செய்யலாம்.
* ஆடி மாதம் – ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கி தானமாக வழங்குவதால் வாழ்க்கையில் இருள் போன்று சூழ்ந்து இருக்கும் துன்பங்கள் விலகி, குடும்பத்தில் ஒளி, வளம், நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
* ஆடிப்பூரம் – ஆடிப்பூரம் அன்று ஆண்டாளுக்கு மல்லிகைப்பூ மாலை சாத்தி, அக்காரவடிசல் நிவேதனம் செய்து வழிபடுவது திருமணம் யோகத்தை தரும். நல்ல வாழ்க்கைத்துணை, குழந்தைப் பேறு, குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும் என்பது வைணவ மரபில் நம்ப்படுகிறது.
* ஆடிப்பெருக்கு – ஆடிப்பெருக்கு அல்லது ஆடி வெள்ளியன்று பெண்கள் புதிய மஞ்சள் கயிறை அணிவது தீர்க்க சுமங்கலி பாக்கியம், குடும்ப நலம், தம்பதியரின் ஒற்றுமை நிலைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய வழக்கமாகும்.
* ஆடிச் செவ்வாய் – அரிசி மாவு, வெல்லம், நெய் கொண்டு மாவிளக்கு ஏற்றி ஆடி செவ்வாய் அல்லது ஆடி வெள்ளியில் அம்மனை வழிபடுவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. குடும்ப நலன், குழந்தைப்பேறு, நோய் நிவாரணம் போன்ற வேண்டுதல்களுக்காக இதை செய்கின்றனர். இது பக்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
* ஆடி வெள்ளி – எலுமிச்சை எதிர்மறை சக்திகளை விலக்கும் சின்னமாக பார்க்கப்படுகிறது. எலுமிச்சை மாலை சாற்றி அம்மனை வழிபடுவதன் மூலம் திருஷ்டி, மன அமைதியின்மை போன்றவை நீங்குள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டினை செய்வதால் அதிக பலன் கிடைக்கும்.
* ஆடி வெள்ளி – ஆடி மாதத்தில் அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள், மஞ்சள், குங்குமம் காணிக்கையாக செலுத்தினால் திருமண வாழ்க்கை சிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக ஆடி வெள்ளிகளில் இந்த வழிபாட்டினை செய்வது சிறப்பு.
* ஆடி வெள்ளி – ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை பக்தியுடன் வழிபட்டு, விரதம் இருந்து, விளக்கேற்றி வேண்டுதல் செய்வது குடும்ப நலம், வளம் மற்றும் இறை அருளைப் பெரும் சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது. இந்த நாளில் கூழ் படைத்தல், எலுமிச்சை தீபம் ஏற்றுதல், குத்துவிளக்கு பூஜை போன்ற பாரம்பரிய வழிபாடுகளை செய்வதால் அம்மனின் மனம் மகிழும் என்பது நம்பிக்கை.
* ஆடிவெள்ளி – ஆடி வெள்ளிக்கிழமைகள் அல்லது அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி தாயாருக்கு மாதுளம் பழ முத்துக்களால் 108 முறை அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். செல்வ வளம் பெருகும்.

Source link