ஓம் ரிலீஸ் விபரம்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஓம் படத்தை அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். அதன் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.
தன் தலைவர், அப்பா ரஜினிகாந்த் படத்துடன் தன் படத்தை மோத விட தனுஷுக்கு விருப்பம் இல்லையாம். அதனால் ஆயுத பூஜைக்கு பதில் தீபாவளிக்கு நம் ஓம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் தீபாவளி பண்டிகைக்கு ரன்பிர் கபூரின் ராமாயணா படம் உலகம் முழுவதும் ரிலீஸாவதால் ஓம் படத்திற்கு அதிக அளவில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும்.
நெட்ஃப்ளிக்ஸ் திட்டவட்டம்: இதற்கிடையே திட்டமிட்டபடி அக்டோபர் 16ம் தேதியே ஓம் படம் திரைக்கு வர வேண்டும். நீங்கள் ரிலீஸை தள்ளிப் போட்டால் எங்களின் ஓடிடி பிளானும் மாறும். அது சரிபட்டு வராது என்று ஓம் படக்குழுவிடம் கூறியிருக்கிறதாம் நெட்ஃப்ளிக்ஸ்.
என்ன இருந்தாலும் தலைவர் ரஜினிகாந்த் படத்தோடு தன் படத்தை மோதவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் தனுஷ். அதனால் நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா தலைவரை சந்தித்து தன் நிலைப்பாட்டை சொல்லி ஓம் ரிலீஸை தள்ளி வைக்கும் முடிவில் இருக்கிறாராம் நடிப்பு ராட்சசன்.
நான்கு பேருக்கும் விருது: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஓம் படத்தை அக்டோபர் 16ல் வெளியிடுவதை தவிர வேறு வழியில்லை. இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் ஓம் படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு தேசிய விருது வென்ற கலைவாணன் தான் எடிட்டர்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட 72வது தேசிய விருதுகளில் ராஜ்குமார் பெரியசாமி, கலைவாணன், தனுஷ், மம்மூட்டி ஆகியோருக்கு விருதுகள் கிடைத்தது. இதையடுத்து செட்டில் பெரிய கேக் வெட்டி அந்த சந்தோஷத்தை கொண்டாடினார்கள். தேசிய விருது வென்ற நான்கு திறமைசாலிகள் சேர்ந்து வேலை செய்திருக்கும் ஓம் படம் ஜெயிலர் 2 படத்திற்கு மறுநாள் வருமா இல்லை தீபாவளி பண்டிகைக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தனுஷுக்கு ராயன் படத்திற்காக விருது கிடைத்ததை பார்த்தவர்கள், பிற நல்ல படங்கள் இருக்க இதை போய் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்திருப்பது சரியல்ல என்றார்கள். அதை அறிந்த தனுஷோ, அதுவாக விருது கிடைத்ததாகவும், தட்டிக் கொடுங்க ஆனால் விடாதீங்க என்றார். இயக்குநர் அவதாரம் எடுத்த பிறகு முதல் முறையாக ஒரு இயக்குநராக மேடை ஏறி தேசிய விருது பெறவிருக்கிறார் தனுஷ்.
தனுஷும், அரசியலும்: இதற்கிடையே அவர் அரசியலுக்கு வருகிறார் என்றும், தனிக் கட்சி துவங்குகிறார் என்றும் பேச்சாக உள்ளது. இந்நிலையில் தனுஷ் அரசியலில் என்ட்ரி கொடுத்தால் தவெகவுக்கு அடுத்த இடத்தை பிடித்துவிடுவார். திமுக, அதிமுக காணாமல் போய்விடும் என்று முதல்வர் விஜய்க்கு ராசியான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் கூறியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இது ஒரு பக்கம் இருக்க, தனுஷை தன் கட்சியிலேயே சேர்ந்துவிடக் கூடாதா என விஜய் கேட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது. தற்போதைக்கு சமூக வலைதளங்களில் தனுஷ் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது தான் ஹாட் டாபிக் ஆகும்.
Source link
