மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசையும் பகைத்து கொள்ளாமல், காங்கிரஸ் உடனும் பேசாமல் முதலமைச்சர் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமை அடகு…இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது;மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. டில்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக் கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை, முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.
கேட்கவில்லை… ஏற்கவில்லை…மேகதாது விவகாரத்தில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன். கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த ஷோபா மாடல் அரசின் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை, விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

உடனே நடவடிக்கை இனியும் காலம் தாழ்த்தினால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
