IPL 2027 – ஹர்திக், சூர்யகுமார் 2 பேரையும் கொடுத்து, ஒரு இளம் வீரரை வாங்க MI திட்டம்: முரட்டு டீல் – mumbai indians want to trade hardik pandya and suryakumar yadav for indian young opener

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இம்முறை பெரிய பெரிய வீரர்களின் பெயர்கள் டிரேடிங்கில் அடிபட ஆரம்பித்துள்ளது.

காரணம், கடந்த சில சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற பெரிய அணிகள் தொடர்ச்சியாக சொதப்பி வருவதால் டிரேடிங்கில் தரமான வீரர்களை வாங்கி, அணியை பலப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன் ஒருபகுதியாக, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

மேலும், சிஎஸ்கேவிடம் இருந்து ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோரை வாங்க, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக துபே மற்றும் பிரேவிஸ் இரண்டு பேரையும் விட்டுக்கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் தயங்குவதால், இந்த டிரேடிங் டீல் இழுபறியில் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ், திடீர் முடிவு: இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு டிரேடிங்கில் அனுப்பி, மாற்றாக வைபவ் சூர்யவன்ஷியை வாங்குவது குறித்து பேச ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானிதான், இந்த ஐடியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளாராம்.

இதுகுறித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகள் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், முடிவை உடனே தெரிவிக்க வேண்டாம். ஒரு வாரம் வரை அவகாசம் எடுத்துக் கொண்டு, நல்ல பதிலை கூறுங்கள் எனவும் ராஜஸ்தானிடம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனராம்.

அதுமட்டுமல்ல, வைபவ் சூர்யவன்ஷியை டிரேடிங்கில் அனுப்பினால், ஹர்திக், சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் சேர்த்து, சூர்யவன்ஷிக்கு டிரேடிங் கட்டணமாக 50+ கோடியை கொடுக்கவும் தயார் எனவும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஆஃபரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸுக்கு தேவை: ரோஹித் சர்மாவுக்கு அடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, தரமான இந்திய இளம் ஓபனர் தேவைப்படுகிறார். இதனால்தான், ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் அனுப்பி, சிஎஸ்கேவிடம் இருந்து ஆயுஷ் மாத்ரேவை வாங்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முயற்சித்தது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகமோ, ஆயுஷ் மாத்ரேவை கொடுக்க வாய்ப்பே இல்லை. துபே, பிரேவிஸை மட்டுமே கொடுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால்தான், மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, சூர்யவன்ஷிக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார்.

ராஜஸ்தான் ஒப்புக்கொள்ளுமா? இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், இந்த டிரேடிங் டீலுக்கு ஒப்புக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வைபவ் சூர்யவன்ஷி இருக்கும் தைரியத்தில்தான், சஞ்சு சாம்சனை, சிஎஸ்கேவுக்கு டிரேடிங் செய்தார்கள். தற்போது சூர்யவன்ஷியும் சென்றுவிட்டால், ராஜஸ்தான் அணிக்கு ஓபனர் இடம் காலியாகிவிடும். ஏலத்தின் மூலமோ, டிரேடிங் மூலமோதான் ஒரு ஓபனரை வாங்கியாக வேண்டும்.

இதனால், சூர்யவன்ஷியை டிரேடிங் செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் விரும்பாது எனக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா இருவரையும் வாங்க வாய்ப்பு இருப்பதால், இந்த டீலையும், ராஜஸ்தான் அணியால் அவ்வளவு சீக்கிரம் புறக்கணிக்க முடியாது எனக் கருதப்படுகிறது.

Source link