Minimum Balance Penalty,மினிமம் பேலன்ஸ் இல்லனா பிரச்சினை – மக்களிடம் லட்ச லட்சமாய் வசூலிக்கும் வங்கிகள்! – banks collected over 26 thousand crore in fines from customers for not maintaining minimum balance

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் மொத்தம் எவ்வளவு அபராதம் வசூலித்துள்ளன என்ற புள்ளி விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) பராமரிக்கத் தவறினால் அபராதம் விதிக்கின்றன. விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர்கள் வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்க வேண்டும். வாடிக்கையாளர் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்கத் தவறினால் அதற்கு தண்டனையாக வங்கி அபராதம் விதிக்கிறது. இவ்வாறு குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காததற்காக பல்வேறு வங்கிகள் கடந்த நான்கு ஆண்டுகளில் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ. 26,100 கோடி அபராதமாக வசூலித்துள்ளன.

அதிகபட்ச அபராதம் வசூலித்த வங்கிகள்!

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களிடமிருந்து HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் அதிகபட்ச அபராதத்தை வசூலித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் தொடர்பான தரவுகளை நிதியமைச்சகம் பகிர்ந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கான தரவுகள் 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளையும், தனியார் துறை வங்கிகளுக்கான தரவுகள் 2022-23 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளையும் உள்ளடக்கியுள்ளன.

பட்டியலில் HDFC வங்கி முதலிடம்!

மத்திய நிதியமைச்சகத்தின் தரவுகளின்படி, கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காததற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து HDFC வங்கி அதிகபட்சமாக ரூ. 5,670 கோடி அபராதத்தை வசூலித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி ரூ. 3,787 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா வங்கி ரூ. 2,028 கோடியும் வசூலித்துள்ளன. இப்பட்டியலில் பஞ்சாப் நேஷனல் வங்கி நான்காவது இடத்தில் உள்ளது. இவ்வங்கி ரூ. 1,896 கோடி அபராதத்தை வசூலித்துள்ளது. அதேபோல, இந்தியன் வங்கி 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 1,777 கோடி அபராதத்தை வசூலித்துள்ளது.

சொந்த வீடு கனவை நனவாக்க முடியுமா? பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்

அரசு வெளியிட்ட தகவல்கள்!

ஜூலை 28ஆம் தேதியன்று மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் அரசு இந்தத் தரவுகளைப் பகிர்ந்துள்ளது. குறைந்தபட்ச சராசரி இருப்பைப் (MAB) பராமரிக்காததற்காக பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள் குறித்த தகவல்களை நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி வழங்கியுள்ளார். பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கான இத்தகைய அபராதங்களை ஏற்கனவே ரத்து செய்துவிட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. வங்கிச் சேவைகளை எளிதாக்கும் வகையில் பொதுத்துறை வங்கிகள் தங்கள் சேவை கட்டணக் கட்டமைப்புகளை மறுஆய்வு செய்துள்ளதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் பணம் சார்ந்த முக்கிய மாற்றங்கள் – பொதுமக்கள் கவனத்துக்கு!

அபராதம் வசூலிக்காத வங்கிகள்!

12 பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகள் குறைந்தபட்ச சராசரி இருப்பு தொடர்பான அபராதங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிப்பதில்லை. சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்கான அபராதக் கட்டணங்களை வசூலிப்பதை 12 பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகள் நிறுத்திவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள இரண்டு வங்கிகள் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் வணிகத் தேவைகளின் அடிப்படையில் அபராதக் கட்டணங்களைச் சீரமைத்துள்ளன என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Source link