IPL 2027 – ‘முரட்டு ட்விஸ்ட்’ ஹர்திக்கை வாங்க, மூன்று ஸ்டார் வீரர்களை விட்டுக்கொடுக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு – delhi capitals want to give 3 main players to mumbai indians for hardik pandya trade ipl 2027

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், ஹர்திக் பாண்டியாவை எந்த அணிதான் வாங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கேவுக்கு செல்ல விரும்புவதால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முதலில் சிஎஸ்கேவிடம் டிரேடிங் டீல் பேசி, ஷிவம் துபே, ஆயுஷ் மாத்ரே ஆகியோரை கேட்டது. ஆனால், சிஎஸ்கே நிர்வாகம், ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க மறுத்ததால், டிரேடிங் டீல் கடும் இழுபறியில் இருக்கிறது. தற்போது, துபேவுடன், டிவோல்ட் பிரேவிஸ் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேட்கும் நிலையில், தற்போது சிஎஸ்கே இது குறித்து பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை வாங்க டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முட்டி மோதி வருகிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், எப்படியாவது ஹர்திக்கை வாங்கியே ஆக வேண்டும் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஹர்திக் பாண்டியாவை வாங்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கவும் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவை வாங்க, அவருக்கு மாற்றாக அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, பிரித்வி ஷா ஆகிய மூன்று வீரர்களை விடுவிக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஒரு ஓபனர், ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், ஒரு பினிஷர் வீரர் என மும்பை இந்தியன்ஸுக்கு தேவையான மூன்று பேரை விடுவிக்க முன் வந்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் கணிக்கு: இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸிடம் இருந்து வைபவ் சூர்யவன்ஷியை வாங்குவதற்காக, அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரையும் விட்டுக்கொடுக்க முன் வந்துள்ளது. இதுகுறித்து, ராஜஸ்தான் ராயல்ஸிடம், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பேசியிருப்பதாகவும், நன்கு யோசித்து ஒரு வாரத்திற்கு பிறகு பதில் அளித்தாலே போதும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளதாம்.

சிஎஸ்கேவுக்கு கடும் நிபந்தனை: இந்நிலையில், ஹர்திக் பாண்டியா டிரேடிங் விஷயத்தில், சிஎஸ்கேவுக்கு கடும் நிபந்தனையை விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம், ஹர்திக் டிரேடிங் டீலை ஏற்கவில்லை என்றால், அடுத்து சிஎஸ்கேவிடன் இருந்து துபே, பிரேவிஸ் உடன் 10 கோடியை கேட்க முடிவு செய்துள்ளனர். இந்த மூன்றையும் ஏற்றால் மட்டுமே சிஎஸ்வுக்கு ஹர்திக்கை அனுப்ப மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளது.

ஒருவேளை, சிஎஸ்கே இந்த கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், அவரை டெல்லி கேபிடல்ஸுக்கு அனுப்பி மூன்று வீரர்களையும் வாங்க மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேகேஆர் அணி வெளியேறியது: இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் வாங்கும் பேச்சு வார்த்தையில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் டிரேடிங்கில் வெளியேற வாய்ப்பு இருப்பதால், ரிஷப் பந்தை டார்கெட் செய்து வாங்க முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில், ரிஷப் பந்த் குறித்த டிரேடிங் டீலை பேச லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link