ஆகஸ்ட் மாதம் 2026 காலத்தில் சுக்கிரன், நீச நிலைக்கு செல்கிறார். செவ்வாய், புதன் பகை ஸ்தானத்திற்கு செல்கின்றனர். சூரியன் ஆட்சி பெற்று அமர உள்ளார். இந்த மாதத்தில் நிகழும் கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் கிரக சேர்க்கைகளால் ஏற்படும் யோகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கான பலன் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளவும்.
ஆகஸ்ட் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. குறிப்பாக இந்த மாதத்தில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை கடகம் மற்றும் சிம்ம ராசியில் நிகழ்கிறது. மேலும் குரு சூரியனின் சேர்க்கை பெரிய அளவில் ராசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகள் பெற உள்ள பலன்களை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு இந்த ஆகஸ்ட் மாதம் ஆற்றல் நிறைந்ததாகவும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். உங்களுடைய உடல்நலம் பொதுவாக சிறப்பாக இருக்கும். நீங்கள் மனதளவில் உற்சாகமாக உணருவீர்கள். உங்களுடைய நிதிநிலை சீராக இருக்கும். தனவரவு சிறப்பாக இருந்தாலும், உங்களுடைய செலவுகளை கவனமாக கட்டுப்படுத்துவது அவசியம்.
ஆவணி மாதம் பிறக்க ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் புதிய வேலை வாய்ப்பு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறலாம். இது உங்களுடைய எதிர்காலத்தை மேம்படுத்தும் விதத்தில் அமையும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் உங்கள் முயற்சிகளை தடுக்கும் முயல்வார்கள். நிதானமாக மற்றும் கவனமாக செயல்பட்டால் அதில் நல்ல வெற்றி பெறுவீர்கள்.
மேஷ ஆகஸ்ட் மாத ராசி பலன்
அரசு வேலை அல்லது நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு பயணம் செல்லக்கூடிய சூழல்கள் ஏற்படும். தொழில் செய்யக்கூடியவர்கள் கூட்டு முயற்சியுடன் செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகள் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த மாதத்தில் நீங்களே எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். தாம்பத்திய வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். மாணவர்கள் இந்த மாதத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடன் பிறந்தவர்களுடன் உறவு கொள்ளும் மேம்படும். அவர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றுவதும், மல்லிகை எண்ணெய் அர்ச்சனை செய்து, உங்களுக்கு ஏழரை சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன்
ரிஷபம் நண்பர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் நிதி நிலை ரீதியாக சாதகமாக இருக்கும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கவும், செல்வம் சேரவும் வாய்ப்புகள் கூடி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரம். சமூகத்தினர் அல்லது அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் மரியாதை கிடைக்கும். உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாய்ப்பும், அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.
உங்களுடைய திருமண வாழ்க்கையில் அன்பும் நல்லிணக்கமும் நிலவும். பிள்ளைகளின் முன்னேற்றத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். அபாயகரமான எந்த ஒரு முதலீடு அல்லது நிதிநிலை தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதானமான செயல்பாடு உங்கள் லாபத்தை சாத்தியப்படுத்தவும். உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடன் தவறான புரிதல் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களுடைய பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.
பரிகாரம்
தினமும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். முடிந்தவரை தானங்களை செய்யவும்.
மிதுனம் ஆகஸ்ட் மாத ராசிபலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த மாதத்தில் உங்களுடைய ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வெற்றி அடைய அதிக முயற்சி தேவைப்படும். இந்த மாதத்தில் உங்களுக்கு ஆன்மீகம் மற்றும் கடவுள் சார்ந்த நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் ஆன்மீக நிகழ்ச்சி, பூஜைகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். தேவையற்ற பயணங்களால் உங்களுடைய நேரமும் பணமும் விரயமாக வாய்ப்புகள் உண்டு.
மிதுனம் ஆகஸ்ட் மாத ராசிபலன்
இந்த மாதத்தில் உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம், கிரகங்களின் சில சாதகமற்ற நிலை யாரை நம்புவது என்ற மன குழப்பம் ஏற்படும். இதனால் அந்நியர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
திருமணம் வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். இந்த மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கவனமாக முடிவெடுக்கவும். புதிய முதலீடு விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் தங்கள் கல்வி தொடர்பான கவனத்தை அதிகப்படுத்தவும்.
பரிகாரம்
தினமும் கணபதி வழிபாடு செய்வதும், அருகில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும்.
கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் வெற்றியும், மகிழ்ச்சியை நிறைந்திருக்கும். உங்கள் வாழ்க்கையில் சமநிலையை கடைபிடிக்க முயற்சிக்கவும். உங்களுடைய மன உறுதி அதிகரிக்கும். இது சில முக்கியமான முடிவுகளை எடுக்க உதவும்.
இந்த மாதத்திலும் மோதாதையர்களின் சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய நிதிநிலை முன்னேற்றத்தால் குடும்பத்தில் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதி கிடைக்கும். உங்களுடைய திருமண வாழ்க்கையில் இணக்கம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்கள் இதில் எதிர்பார்த்த வெற்றியை உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். வணிகம் தொடர்பான பயணங்கள் நல்ல பலனை தரும்.
பரிகாரம்:
திங்கட்கிழமை சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யவும்.
