CSK – ஹர்திக் டிரேடிங் மத்தியில், டாப் 4 பேட்டர்கள் யார் யார் என்பதை அறிவித்த சிஎஸ்கே: பெரிய ட்விஸ்ட் – chennai super kings decided top 4 batters for ipl 2027 amid hardik pandya trading

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில், ஹர்திக் பாண்டியாவை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

ஹர்திக் பாண்டியாவும் சிஎஸ்கே செல்ல விரும்புவதால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன்தான் டிரேடிங் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தது. ஷிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரை விட்டுக்கொடுத்தார், ஹர்திக்கை உடனே விட்டுக்கொடுக்க தயார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால், எக்காரணம் கொண்டும் ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க முடியாது என சிஎஸ்கே திட்டவட்டமாக தெரிவித்ததால், பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்தது. பிறகு, ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் டிவோல்ட் பிரேவிஸ் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் கேட்ட நிலையில், பிரேவிஸை விடுவிக்கலாம் என்ற முடிவுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வந்தது.

தோனி, ருதுராஜ் எதிர்ப்பு: இந்நிலையில், டிவோல்ட் பிரேவிஸை விடுவிக்கலாம் என்ற முடிவுக்கு, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும், தோனியும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றா ஆயுஷ் மாத்ரே, டிவோல்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோரை விடுவிக்காமல், ஷிவம் துபேவையும், பணமும் கொடுத்து வாங்க வேண்டும் என தோனி அறிவுறுத்தியதாகவும், இனி டிரேடிங் பேச்சு வார்த்தையை நானே முன் நின்று நடத்துகிறேன் எனவும் தோனி கூறியுள்ளாராம்.

சிஎஸ்கே அறிவிப்பு: இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் 4 பேட்டர்கள் யார் யார் என்பதை சிஎஸ்கே நிர்வாகம், எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதுகுறித்து 4 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோரது புகைப்படங்கள் உள்ளன. இதன்மூலம், பிரேவிஸ் மற்றும் துபே ஆகியோரை விடுவிக்க வாய்ப்பே இல்லை என்பதை சிஎஸ்கே மறைமுகமாக தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அதிருப்தி: இப்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தொடர்ச்சியாக முரண்டு பிடித்து வருவதால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், வேறு அணிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸிடம் பேசி ஹர்திக், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை விடுவித்து, மாற்றாக வைபவ் சூர்யவன்ஷியை வாங்க பேச ஆரம்பித்துள்ளனர்.

மறுபக்கம், ஹர்திக் பாண்டியாவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற முடிவில், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, பிரித்வி ஷா ஆகியோரை விடுவிக்க முன் வந்துள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வாங்கும் பேச்சு வார்த்தையில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரிஷப் பந்தை, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி நிர்வாகம் டிரேடிங்கில் அனுப்ப வாய்ப்புள்ளதால், இனி ரிஷப் பந்தை வாங்க திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளனர். ரிஷப் பந்தை, டெல்லி கேபிடல்ஸுக்கு கொடுப்பதாகதான், லக்னோ அணி இருந்தது. ஆனால், டெல்லி அணி, ஹர்திக்கை வாங்க தீவிரம் காட்டி வருவதால், தற்போது கேகேஆர் அணி, ரிஷப் பந்தை வாங்க, தற்போது இருந்தே தீவிரமாக முயற்சிக்க ஆரம்பித்துள்ளது.

இப்படி, ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் பெரிய பெரிய வீரர்களின் பெயர்கள் அடிபடுவதால், டிரேடிங் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link