CSK – எல்லா வீரர்களும் சென்னைக்கு வரணும்: சிஎஸ்கே வீரர்களுக்கு நிர்வாகம் திடீர் உத்தரவு – என்ன காரணம்? – csk players will come to chennai within 2 days

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஐபிஎல் 2026 சீசனுக்கான டிரேடிங்கின்போது, சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸிடம் டிரேடிங் பேச்சு வார்த்தை நடத்தியபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம், சாம்சனுக்கு மாற்றாக ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோரை கேட்ட நிலையில், சிஎஸ்கே உடனே விடுவித்தது. இப்படி, இரண்டு வீரர்களையும் உடனே விடுவித்து சாம்சனை வாங்கிய நிலையில், ஐபிஎல் 2026 சீசனில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாத குறை அப்பட்டமாக தெரிந்தது.

மேலும், சாம்சனை வாங்கிய நிலையில், டாப் ஆர்டரின் அதிரடி பேட்டர் உர்வில் படேல், பேக்கப் வீரராக இருக்கும் நிலைமையும் ஏற்பட்டது. அதாவது, சாம்சனை அவசரப்பட்டு வாங்கியதால், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டது.

தற்போது, ஹர்திக் பாண்டியாவை வாங்கும்போதும், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே, டிவோல்ட் பிரேவிஸ் போன்றவர்களை விடுவித்து, பேட்டிங் வரிசையில் வெற்றிடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில், சிஎஸ்கே தெளிவாக இருக்கிறது. இதனால்தான், ஹர்திக் பாண்டியாவை வாங்கும் பேச்சு வார்த்தை தொடர்ச்சியாக இழுபறியில் உள்ளது.

சிஎஸ்கே நிர்வாகம் உத்தரவு: இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்க்களும், அடுத்த 2 நாட்களுக்குள் சென்னை வர வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வீரர்களுக்கு பிட்னஸ் தேர்வை வைக்கதான் இந்த முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐபிஎல் 2027 சீசன் நடைபெற இன்னமும் அதிக மாதங்கள் இருக்கும் நிலையில், திடீரென்று அனைத்து வீரர்களையும் வர வைக்க, மற்றொரு காரணம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்திருப்பதால், அவரை அறிமுகம் செய்து வைக்கதான் சிஎஸ்கே நிர்வாகம், அனைத்து வீரர்களையும் அழைத்திருப்பதாக, சில தகவல் தெரிவிக்கிறது.

மறுபக்கம், டிரேடிங்கில் விடுவிக்கப்படும் வீரர்களின் பெயர்களை தெரிவித்து, அவர்களிடம் ஒப்புதல் பெறதான், அனைத்து வீரர்களையும் சென்னை வரவைக்க சிஎஸ்கே முடிவு செய்திருப்பதாக, சில தகவல்கள் கூறுகிறது. அதாவது, குறிப்பிட்ட சில வீரர்களை மட்டும் அழைத்தால், டிரேடிங் குறித்த தகவல்கள் கசிந்துவிடும் என்பதால்தான், அனைத்து வீரர்களையும் வர வைக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக, சில தவகல்கள் தெரிவிக்கிறது.

டிவோல்ட் பிரேவிஸ் போன்றவர்கள் தி ஹன்ட்ரட் தொடரில் விளையாடுகிறார்கள். இப்படி, கிரிக்கெட் தொடரில் ஆடும் பேட்டர்கள், சென்னை வரத் தேவையில்லை என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புது தலைமை பயிற்சியாளர் யார்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீப காலமாகவே சேப்பாக்கத்திலும் சொதப்ப ஆரம்பித்துள்ளது. ஒரு காலத்தில், சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டையாக இருந்த நிலையில், தற்போது அந்த கோட்டையில், ஓட்டை விழுந்துவிட்டது. இதனால், அந்த ஓட்டையை சரி செய்ய, சேப்பாக்கம் பிட்ச் குறித்து, நன்கு தெரிந்த பயிற்சியாளரை, அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த கேமங் பதானி இந்த ரேஸில் இருக்கிறார்.

மேலும், அதிரடியாக ஆடும் வகையில், அணியை கட்டமைக்கும் பயிற்சியாளருக்கும் முக்கியத்துவம் கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link