திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறை அருகே மலைப்பகுதியில் உள்ள தனியார், அரசு வருவாய் நிலங்களில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சியளித்தது. அத்துடன் அருகில் உள்ள வனப்பகு திக்கும் தீ பரவும் அபாயம் உருவானது.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வரும் நாட்களில் இதுபோன்று காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
