புதுச்சேரியில் நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு.. அரசியல் கட்சிகளின் தற்போதைய நிலை என்ன? – puducherry filing of nomination papers concludes tomorrow march 23

புதுச்சேரியில் நாளையுடன் (மார்ச் 23) வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரி வேட்புமனுத் தாக்கல்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகம் , புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.அதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் மாதம் 16 தேதி தொடங்கியது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9

இதனைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் மொத்தம் 17 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் சுமார்17 மையங்களில் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 24ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 26ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவங்க மூணு பேருக்கு சீட்டு கன்ஃபார்ம்…டிக் அடித்த ஸ்டாலின்!

இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை

தேர்தல் பணிகளில் 4,934 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக 5,410 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில்,வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
இதற்கிடையில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், பாஜகக்கு 10 தொகுதிகள், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கூட்டணிக் கட்சிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

இதையடுத்து, அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், கூட்டணியில் அதிமுகக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்து அறிவித்தார். கூட்டணி ஒற்றுமையை கருத்தில் கொண்டு அதிமுக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை ஆதரிக்கிறோம் என்றும் அன்பழகன் கூறினார்.
மற்றொரு புறம், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 17 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், திமுகவுக்கு 11 தொகுதிகள் மற்றும் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்க காங்கிரஸ் முன்மொழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் 22ஆம் தேதியுடன் நிறைவு

ஆனால், 30 தொகுதிகளையும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று திமுக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.வேட்புமனுத் தாக்கல் 22ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், சனிக்கிழமை தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஜெகத்ரட்சகன் எம்பி உள்ளிட்ட குழுவினர் காலை 10 மணி முதலே தனியார் ஹோட்டலில் காத்திருந்தனர்.
சுமார் 12 மணி நேரம் காத்திருந்தபோதிலும், காங்கிரஸ் தரப்பினர் வராததால் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் சென்னை திரும்பினர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடர திமுக விருப்பம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிரிஷ் ஜோடங்கர் தலைமையில் தனியார் விடுதியில் ஆலோசனை நடைபெற்றது. ஆனால், திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் நிர்வாகிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அடுத்த அறிவிப்புகளால் பரபரப்பில் காணப்படுகிறது.