Cpm Shanmugam About Seatsharing,முதல்வரை சந்திக்கும் சிபிஎம் மாநில செயலாளர் பெ.ஷண்முகம்..நல்ல முடிவு எட்டப்படும் என நம்பிக்கை – cpm shanmugam meeting with cm stalin regarding seatsharing

திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பெ.ஷண்முகம் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளார்

முக்கிய அம்சங்கள்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

முதல்வரை சந்திக்கும் பெ.சண்முகம்

cpm shanmugam -cm stalin meeting
திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதில் உடன்பாடு ஏற்படாத கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். புதிய கட்சிகளின் வருகையால் தங்களுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன என அவர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து வந்தனர். இதனிடையில் தொடர்ந்து திமுகவிடம் ஆறு தொகுதிகள் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் தனி தனியே கருத்து கேட்கப்பட்டதாம். பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஆறு தொகுதிகளை கொடுக்க வேண்டும் என சொன்னார்களாம்.
ஒருவேளை கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்றால் தனியாக போட்டியிடும் முடிவை எடுக்குமாறும் கூறினார்களாம். இவ்வாறு சிபிஎம் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினை கூறி வருகின்றனர். இதனால் ஒருமித்த கருத்து வராத காரணத்தால் பத்து மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை கூட்டம் நடந்ததாக தெரிகின்றது.
இந்நிலையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில் இறுதி முடிவை மார்க்சிஸ்ட் கட்சியினர் எடுத்ததாக தெரிகின்றது. ஒருவேளை திமுகவினர் தங்கள் கேட்ட தொகுதிகளை வழங்கவில்லை என்றால் சிபிஎம் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து அவர்கள் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து இன்று இன்னும் சற்று நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.ஷண்முகம் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்திக்க உள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில் ,ஆறு தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்ற முடிவிற்கு வந்துள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசவுள்ளோம். இந்த சந்திப்பில் நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.
இதையடுத்துமுதலமைச்சர் முக ஸ்டாலின்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்பாரா ? அவர்கள் கேட்பதை போல ஆறு தொகுதிகளை கொடுப்பாரா ? என்பது இன்றைக்குள் தெரிந்துவிடும். இதற்கிடையில் திமுகவுடன் தொகுதிப்பங்கீட்டில் சுமுகமான முடிவு எட்டப்படாத தமிழக வாழ்வுரிமை கட்சி இக்கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கின்றது. ஏற்கனவே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தங்களுக்கு ஒரு தொகுதி தான் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்
மேலும் தாங்கள் முன் வைத்த கோரிக்கையையும் திமுக ஏற்கவில்லை என தெரிவித்தார் வேல்முருகன். ஒருவேளை கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை என்பது போல பேசி வந்த தவாக தலைவர் வேல்முருகன் தான் சொன்னதை போல திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தங்களுக்கு ஆறு தொகுதிகளை கொடுக்க வேண்டும் என சிபிஎம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒருவேளை அவர்கள் கேட்டதை போல ஆறு தொகுதிகளை கொடுக்கவில்லை என்றால் அவர்களும் கூட்டணியை விட்டு வெளியேறும் நிலை வரலாம். ஏற்கனவே தவாக கட்சி வெளியேறியதை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியும் வெளியேறினால் அது சரியாக இருக்காது.எனவே இதை கருத்தில் கொண்டு திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கும் கூடுதல் ஒரு தொகுதியை வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம் – CPM சண்முகம் பேட்டி

இந்நிலையில் இன்று மாலைக்குள் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடருவார்களா ? அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா ? என்பது தெரிந்துவிடும்.