ஐபிஎல்: பெங்களூரு அணி வீரர்களுக்கு விராட் கோலி அறிவுரை

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி பயிற்சியின் போது அணி வீரர்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில்

‘கடந்த 2-3 ஆண்டுகளாக நாம் கடினமாக உழைத்ததால் தான் கடந்த ஆண்டு (2025) கோப் பையை வென்று சாதிக்க முடிந்தது. வரும் சீசன் இன்னும் கடினமானதா கவே இருக்கும். ஏனெனில் மற்ற எல்லா அணிகளும் மிகவும் வலுவாக வருவார்கள்.

வரும் நாட்களை நாம் வீணடிக்கக்கூடாது. பயிற்சியில் ஒவ்வொரு நிமிட மும் முக்கியமானது. எந்தவொரு பயிற்சி அமர்வின் போதும் ஒரு நிமி டத்தை கூட விரயம் செய்யாமல் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண் டும். இந்த இரண்டரை மாதங்களும் நம்முடைய 120 சதவீத உழைப்பை கண்டிப்பாக அணிக்காக வழங்க வேண்டும்’ என்றார்.

Source link