பாஜக கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை..- தேர்தல் நெருங்கும் நேரத்தில் சரத்குமார் ஆவேசப் பேச்சு! – bjp sarathkumar statement over the fact that he has not been assigned any responsibilities

எனக்கு பொறுப்பு வழங்கவில்லை என ஆதரவாளர்கள் ஆதங்கம்படுவதாக பாஜக நிர்வாகி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

sarathkumar press meet(புகைப்படங்கள்Samayam Tamil)
சென்னையில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜகவில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்க படவில்லை. பொறுப்பு இருந்தால்தான் கட்சியில் செயல்பட முடியும் ஒரு உறுப்பினராக என்னால் செயல்பட முடியாது. நாட்டாமை குடும்பத்தினர் என ஆதரவாளர்கள் குறிப்பிட்டு அவர்கள் மட்டும் அல்ல தானும் ஆசனத்தில் உள்ளதாக கூறினார். இது குறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் தேசிய தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

உங்களின் அருமையும் பெருமையும் அறிவும் ஆற்றலும் தெரிய வந்த பிறகும் கட்சிப் பொறுப்பு வழங்காதது ஏன் என ஆதரவாளர்கள் என்னிடம் கேட்கின்றனர். திருச்சி பொது கூட்டம் மேடையில் உங்கள் புகைப்படம் கூட இல்லை என ஆதரவாளர்கள் ஆதரவு பட்டனர். அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யுமா இல்லையா என்பது எனக்கு தெரியாது பொருள் தெரிந்து தான் பார்க்க வேண்டும்.

நானும் என் மனைவியும் தேர்தலில் போட்டியிட போவதில்லை தலைமை சொன்னால் கூட நிற்க மாட்டேன் என்னுடைய பயணித்தவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற பட்டியலை கொடுத்துள்ளேன் என்று கூறினார்.