சசிகலா ஆதரவாளர்களுக்கு ஒரு நற்செய்தி- நாளை மாலை 7 மணி வரை வேட்பாளர் விருப்பமனு நீட்டிப்பு – good news for sasikala supporters candidate application deadline extended till 7 pm tomorrow

சசிகலா ஆதரவு APTMK கட்சியின் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய, நாளை மாலை 7 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

Sasikala New Party APTMK(புகைப்படங்கள்Samayam Tamil)
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு, சசிகலா அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறேன் என்று அறிவித்து இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் அவரை மீண்டும் அரியணையில் ஏற்றத் துடித்தனர். அதன் விளைவாகவே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அண்மையில் முறைப்படி செயல்படத் தொடங்கியதுதான் இந்த அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (APTMK).

இந்தக் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகள் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழித்தோன்றலாகவே வடிவமைக்கப்பட்டு உள்ளன.

சசிகலாவின் மெகா கூட்டணி திட்டம்

சசிகலா அவர்கள் அண்மையில் மேற்கொண்ட புரட்சிப் பயணம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக, வரும் 2026 தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க இக்கட்சி திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக, அதிமுகவின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுக்கவும், ஒரு மெகா கூட்டணியை உருவாக்கவும் APTMK ஒரு பாலமாகச் செயல்படத் தொடங்கி உள்ளது.

விருப்ப மனுத் தாக்கல் மற்றும் கால அவகாச நீட்டிப்ப

சமீபத்தில் தொடங்கப் பட்ட கட்சி என்றாலும், தமிழகம் முழுவதும் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் இக்கட்சியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். மார்ச் 18-ல் தொடங்கிய விருப்ப மனுத் தாக்கலில், எதிர்பார்த்ததை விட அதிகமானோர் மனு தாக்கல் செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே, நாளை (மார்ச் 23) மாலை 7 மணி வரை கால அவகாசத்தை நீட்டித்து அக்கட்சி ஃ அதிரடி காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியல் கணக்கு

இது சசிகலாவின் நேரடி அரசியல் பிரவேசத்திற்கான ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதன் மூலம், அதிமுகவிற்குத் தனது பலத்தை நிரூபிக்க சசிகலா தரப்பு முயல்கிறது.