திமுகவிற்கு தவெகஒரு அச்சுறுத்தல்..த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது – கடம்பூர் ராஜீ! – admk kadambur raju criticize dmk is afraid of the tvk party in 2026 election activity

திமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகம் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கின்றார்கள். அதன் விளைவு தான் த. வெ. க. வை பார்த்து திமுக பயப்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ விமர்சித்துள்ளார்.

கடம்பூர் ராஜீ(புகைப்படங்கள்Samayam Tamil)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜீ தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 5ஆண்டுகளாக திமுக ஆட்சி நடத்திய விதம் மக்களுக்கு மட்டுமல்ல அரசியல் கட்சிகளுக்கும் திருப்திகரமாக இல்லை.

மேலும் மக்களை ஏமாற்றி விட்டார்கள் .விலைவாசி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாதது. சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் அமளிக்காடாக, அதிலும் போதைப்பொருட்கள் கலாச்சாரத்தின் மையமாகவே தமிழகத்தை பயன்படுத்தும் அளவில் இன்றைக்கு பாலியல் வன்கொடுமை. கொலை, கொள்ளை என இவையெல்லாம் இந்த தேர்தலில் மக்கள் மனதில் எதிரொலிக்கும்.

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும் ஏதோ கூட்டணி தர்மத்திற்காக இரண்டு மூன்று தேர்தலில் இருந்த காரணத்தினால், இதுவரை இருந்தார்கள் இப்பொழுது ஏதாவது ஒரு சாக்கு சொல்லி எண்ணிக்கையின் அடிப்படையில் காரணத்தை சொல்லி, திமுகவில் இருந்து கட்சிகள் வெளியேற ஆரம்பித்திருக்கின்றன. வெளியேறாத கட்சிகள் கூட அங்கே ஒருமுத்த கருத்தோடு இல்லை. இன்னைக்கு திருமாவளன் கூட வேதனையோடு அவர்கள் கட்சி தொண்டர்களுக்கு வேறு வழி இல்லாமல் கடைசி நேரத்தில நாம் ஏதோ இக்கட்டில ஆகப்பட்டுவிட்டோம்.

ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!

இனிமேல் வழி இல்லை இருப்பதை பெற்றுக் கொண்டு பயணிக்க வேண்டிய நிலையில இருக்கின்றோம் என்று மிகுந்த மன வருத்தத்தை அவருடைய கட்சி தொண்டர்களிடம் பதிவு செய்து ஒரு கருத்து பதிவை வெளியிட்டுருக்கின்றார்.இன்னும் சொல்லப்போனால் அதிமுக கூட்டணியில ஒரு நெருடல் இல்லை. ஒரு உரசல் இல்லை.
ஒருமித்த கருத்தோடு உடன்பாட்டோடு பொதுச்செயலாளர் சொன்னதை போல இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தொகுதி உடன்பாடும் சுமூகமாக தொகுதி எண்ணிக்கையும் சுமூகமாக அவர்கள் அந்தந்த கட்சிகள் விரும்புகின்ற தொகுதியையும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்கின்ற முறையிலே விரைவில வெளிய வர பட்டியல் வெளிய வர இருக்கின்றது என்ற நிலையிலதான் அதிமுக -பாஜக கூட்டணி சுமூகமான நிலையில் உள்ளது இதிலே ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்றால் திமுக எப்போதும் , பாஜகவிற்க்கு அடிமையாக அதிமுக இருப்பதாக, பாஜகவை விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படையில கூட்டணி கட்சியில அடிமையாக நடத்துவதை போல ஒரு கருத்தை சொல்லுகின்றார்.
உண்மையிலேயே அடிமையாக நடத்துவது என்று சொன்னால் திமுக தான் தன்னுடைய கூட்டணி கட்சிகளை அடிமைப்படுத்தி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளை அவர்களே வரையற செய்து எத்தனை தொகுதியில் வேண்டும் என்று கேட்பது அல்ல.. இத்தனை தொகுதிதான் உங்களுக்கு என்று சட்டாம் பிள்ளையோடு அதிகாரத்தோடு பேசி இத்தனை தொகுதிகள் தான் சொல்லி அதில் இத்தனை தொகுதிகளில் எங்கள் சின்னத்திலே உதயசூரியன் சின்னத்திலே நிற்க வேண்டும் என்று சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தி ஒரு திணிப்பை அவர்கள் மீது திணித்து அவர்களை அடிமையாக நடத்துகிறது.
திமுக தான் தன்னுடைய கூட்டணி கட்சிகளை அடிமையாக நடத்துகின்றது என்ற நிலையிலதான் அந்த கூட்டணி இருக்கின்றது எனவே அது பொருந்தாத கூட்டணி.ஒட்டுமொத்த ஒருமுத்த கருத்து இல்லாத கூட்டணி. நிச்சயமாக தேர்தல்ல இணக்கமாக அனைவரும் ஒன்றுபட்டு ஒழுக்கமாக அந்த தேர்தல் பணி அங்கே அந்த கூட்டணியில்நடைபெறாது என்று கூறினார்.இதனை தேர்தல் களத்தில் பார்க்கலாம் த.வெ. க விஜய்க்கு திமுக கடுமையாக பயப்படுகிறது நான் இல்லை என்று சொல்லவில்லை விஜய் கட்சி தொடங்கியது முதல் நாங்கள் பெருசா எதுவும் விமர்சனம் செய்யவில்லை இந்தியாவில் உரிமை உள்ளவர்கள், விருப்பம் உள்ளவர்கள் யாரும் அரசியல் கட்சியை தொடக்கலாம்.
அந்த நிலையிலதான் நாங்கள் விஜய கட்சியை பார்க்கிறோம். ஆனால் திமுக மட்டும் தவெக துவங்கப்பட்டதில் இருந்து ஒரு பதட்டத்தோடு அவர்களுக்கு அனுமதி கொடுப்பதில இருந்து, இன்றைக்கு கரூர் சம்பவம் சிபிஐ விசாரணை இருக்கிறது.அத தாண்டி கருத்து சொல்வது சரியாக இருக்காது. வரிசையாக அதற்கு முன்பாக நடைபெற்ற த. வெ. க. கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதில இருந்து இடத்தை தேர்வு செய்தில இருந்து எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது தெரியும்.
ஏன் என்று சொன்னால் யாருக்காவது வளம் இருந்தால்தானே அவர்களைப் பார்த்து பயப்படுவார்கள். திமுகவிற்கு தமிழக வெற்றி கழகம் ஒரு அச்சுறுத்தலாக நினைக்கின்றார்கள். அதன் விளைவு தான் த. வெ. க. வை பார்த்து பயப்படுகின்றனர் ஓ பி எஸ் திமுகவில் ஒரு அங்கம். எங்கள் கட்சியில் இருந்தவரை அவரைப் பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்கும். திமுகவிற்கு போன பிறகு அவரைப் பற்றி பேசுவது ஒரு தகுதியான நிலைப்பாடாக நாங்கள் எடுக்கவில்லை என்றார்.