சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 30-ந்தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது.
இந்த நிலையில் சென்னை ரசிகர்களை குதூகலப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் முதல் முறையாக ‘ரோர்26’ என்ற பெயரில் மெகா ரசிகர்கள் நிகழ்ச்சி சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் சி.எஸ்.கே. அணிக்காக விளை யாடிய நட்சத்திரங்கள் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளிவிஜய், பத் ரிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் தற்போதைய சி.எஸ்.கே. அணி வீரர்களுடன் இணைந்து காட்சி போட்டி உள்ளிட்ட சில சுவாரசியமான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதால் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து ஆஸ்கார் விருது பெற்றவரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளார்.
