மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோவின் தியோதிஹுவாகன்(Teotihuacn) பகுதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘பிரமிடு ஆப் தி சன்’ (Pyramid of the Sun) என்று அழைக்கப்படும் பண்டைய கால பிரமிடு கட்டுமானங்கள் முன்பு திரண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வசந்த காலத்தை(Spring Equinox) வரவேற்று உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்தவர்கள் பிரம்மாண்டமான பிரமிடு அருகே நின்று சூரிய உதயத்தைக் கண்டு ரசித்ததுடன், பல்வேறு வழிபாட்டுச் சடங்குகளிலும் பங்கேற்றனர். மக்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்து நடனமாடி இசை முழக்கங்களுடன் வசந்த காலத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
முன்னதாக பிரமிடு பகுதியில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு, மெக்சிகோவின் மிக முக்கியமான கலாச்சார விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
