திமுகவுகு குட் Bye சொன்ன வேல்முருகன்.. மீண்டும் ராமதாஸுடன் இணைய வாய்ப்பு? களம் எப்படி இருக்கு – tvk velmurugan might rejoin ramadoss pmk changes its possible

திமுக கூட்டணியில் இருந்து விலகிய தவாக வேல்முருகன் மீண்டும் ராமதாஸ் தரப்புடன் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேல்முருகன்(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் 2026 காண சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணியில் முன்பு இல்லாத அளவிற்கு இதுவரை 28 கட்சிகளை திமுக தலைமை சேர்த்துக் கொண்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத சூழலில் தொகுதி பங்கீடு இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில், திமுகவில் நீண்ட காலமாக அங்கு வகித்த காங்கிரஸ் தொகுதிகளை அதிகப்படியாக கேட்டது.ஆனால், திமுக இதற்கு மறுப்பு தெரிவிக்கவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தொகுதி பங்கீடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!

இதனைத் தொடர்ந்து, சிபிஐ, காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மருமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், விசிக, தேமுதிக , தவாக உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டும் தொகுதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில்,வரும் சட்டமன்ற தேர்தலில் வேல்முருகனின் தவாக கூடுதல் தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனை திமுக பரிசிலனை செய்ய வேண்டும் என்று கேட்க்கொள்ளப்பட்டது. ஆனால், திமுக தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை.இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுவதாக அறிவித்தது. கடந்த 2019 மக்களவை தேர்தல் தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அங்கம் வகித்திருந்தது. மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டது. குறிப்பாக பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். அப்போது திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 93 ஆயிரத்து 801 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த முறையும் திமுக கூட்டணியில் இருப்பதால் கூடுதல் தொகுதிகள் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் காய் நகர்த்தி வந்தார். ஆனால் திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்திருப்பதால் ஒரே ஒரு தொகுதி வழங்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை வேல்முருகன் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அரசியல் வட்டாரத்தில் வேறு சில காரணங்களும் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வேல்முருகன் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் செல்வதற்காக விமானத்தில் சென்றுள்ளார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி யை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த சந்திப்பானது சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்ட தாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு நடந்து 4 நாட்களுக்கு பிறகு தான் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.அப்போது திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் தரவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் முடிவை நிர்வாகிகளுடன் சேர்ந்து எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை தமிழக கட்சியின் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒருபோதும் பாஜக கூட்டணிக்கு செல்ல போவது கிடையாது என்று நேரடியாகவே வேல்முருகன் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இதனால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணிக்கு செல்லவில்லை என்றால் மீதம் இருப்பது விஜயின் தமிழக வெற்றி கழகமும், புதியதாக ராமதாஸ் சசிகலா கூட்டணியும் தான். ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், தவெக கட்சித் தலைவர் விஜயை வேல்முருகன் அரசியல் வட்டாரத்தில் கடுமையாக விமர்சித்து போராட்டங்களை நடத்தி இருந்தார். இந்த சூழலில், ராமதாஸ் தரப்புடன் மீண்டும் கைகோர்ப்பாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது