புதுச்சேரி,
தமிழகம், புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது என அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.
1. லாஸ்பேட்டை – V.சாமிநாதன்
2. காரைக்கால் தெற்கு – K.A.U.அசனா
3. நெட்டப்பாக்கம் (தனி) – L.பெரியசாமி
4. திருபுவனை (தனி) – AK. சாய் J. சரவணன் குமார்
5. முத்தியால்பேட்டை – J.பிரகாஷ் குமார்
6. பாகூர் – N.தனவேலு
7. ராஜ் பவன் – V.J.சந்திரன்
8. உப்பளம் – S.சிவா
9. உழவர்கரை – S.சசிபாலன்
10. அரியாங்குப்பம் – S.குமரவேலு
11. மணவெளி – B.ராமு
12. வில்லியனூர் – R.ரமேஷ்
13. முதலியார்பேட்டை – N.மணிபாலன்
14. மண்ணாடிப்பட்டு – K.பாரதிதாசன்
15. உருளையன்பேட்டை – S.மரிய பிரான்சிஸ்
16. மங்கலம் – M.K.சத்யா
17. காமராஜ் நகர் – Dr.R.சுமன்
18. நெல்லித்தோப்பு – S.விக்னேஷ்வரன்
19. காலாப்பட்டு – D.சசிக்குமார்
20. இந்திரா நகர் – S.முருகன்
21. கதிர்காமம் – R.ஜெயந்தி
22. ஊசுடு (தனி) – S.சரகணபவா
23. தட்டாஞ்சாவடி – M.பன்னீர்செல்வம்
24. ஏம்பலம் (தனி) – V.தமிழ்ச்செல்வன்
25. நெடுங்காடு (தனி) – U.காமராஜ்
26. திருநள்ளாறு – A.ராஜா முஹம்மது
27. காரைக்கால் வடக்கு – A.வெங்கடேஷ்
28. நிரவி -T.R. பட்டினம் – G.கணேஷ்
29. மாகே – M.பிரிஜேஷ்
30. ஏனாம் – A.தோட்டா ராஜூ
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
