போதை மாத்திரை கலந்த கள் குடித்தவர்களுக்கு உடல்நல குறைவு: வதந்திகளை நம்பவேண்டாம் – புதுக்கோட்டை காவல்துறை

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சமூக வலைதளங்களில் போதை மாத்திரை கலந்த கள் குடித்த 40 நபர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியிடபட்ட செய்தி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி 4 உட்கோட்டம், வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட மேலப்புள்ளான்விடுதி பகுதியில் போதை மாத்திரை கலந்த கள் குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 நபர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், வெளியான சமூக வலைதள செய்தி தொடர்பான விசாரணையில், கள் குடித்த 9 நபர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். மேலும் அனுமதியின்றி கள் விற்பனை செய்தது தொடர்பாக 3 நபர்கள் மீது வடகாடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கு சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

எனவே சமூக வலைதளங்களில் போதை மாத்திரை கலந்த கள் குடித்து 40 நபர்களுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link