அமராவதி
ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா நகரில் இருந்து ராஜமகேந்திரவரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, தேவரப்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட எர்னாகுடெம் பகுதியருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அந்த கார் திடீரென சாலை பிரிப்பானின் மீது மோதி எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே, 3 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
