ஆர்.பி.உதயகுமார் வீட்டில் நடந்த பறக்கும் படை திடீர் சோதனை .. ஆவணங்கள் சிக்கியதா? அதிமுகவில் பரபரப்பு! – flying squad conducts raid at the residence of former aiadmk minister r.b. udhayakumar

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இல்லத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர் பி உதயகுமார்(புகைப்படங்கள்Samayam Tamil)
திருமங்கலம் அடுத்த டீ குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் கட்சியினரை அழைத்து அனுமதி இன்றி கூட்டம் நடத்தி பண பட்டு வாடா செய்வதாகவும் அங்கிருக்கும் அவரது இல்லத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் தொடர்ந்து திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் பறக்கும் படையினர் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை இட்டனர்.சோதனையின் போது முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அங்கிருந்தார்.தொடர்ந்து நடத்திய சோதனையில் எதுவும் சிக்காததால் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் நடைபெற்ற சோதனை குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆர்.பி. உதயகுமார், தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சியின் தாக்கத்தில் செயல்படுகின்றனர் என குற்றம்சாட்டினார். அம்மா கோவிலில் உள்ள ஒவ்வொரு அறையும் விரிவாகச் சோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால் எந்த விதமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.மேலும், தேர்தல் ஆணைய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றியே அதிமுக செயல்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் கட்சியின் தேர்தல் பணிகளை தடுக்க திட்டமிட்ட முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!

எங்களிடம் எந்த தவறும் இல்லை; அதனால் எங்களுக்கு பயமுமில்லை என்றார். இதுபோன்ற அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களால் அதிமுகவின் தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். தேர்தல் அதிகாரிகள் சுயாதீனமாகவும், நியாயமாகவும் செயல்பட வேண்டும்; ஆளுங்கட்சியின் பாதிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.மேலும், ஏதாவது குற்றச்சாட்டு உருவாக்க முயற்சிகள் நடப்பதாக குற்றம்சாட்டிய அவர், அது எவ்விதத்திலும் வெற்றியடையாது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி அறிவித்தது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க உள்ளது குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக அதிமுக நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கபட்டிருந்த நிலையில், தற்பொழுது ராமதாஸ்- சசிகலா புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த நாள் தமிழக அரசியல் களத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது அதன்படி, மாநில அரசு தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் நலத்திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகள் அடிகள் நாட்டு நிகழ்ச்சிகள் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் அரசு அலுவலகங்கள் அரசு ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை இனர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் பொது இடங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் படங்கள் பெயர்கள் மூடி மறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் விலக்கு அளித்துள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் மதுபானம் வழங்குவது தேர்தல் குற்றம் என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.