சினிமா பயணத்தில் 49வது ஆண்டு!.. ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘ஹாய்’ படக்குழு

சென்னை,

தமிழ் திரையுலகில் 1980–90களில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் ஆகியோருடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

நடிகை மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல்வேறு துறைகளில் தன்னை நிரூபித்துள்ள ராதிகா, சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் திகழ்ந்தார். தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹாய்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் கவின் ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் சினிமா துறையில் 49வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு ‘ஹாய்’ படக்குழுவினர் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர். இந்த சர்ப்ரைஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது நடிகை நயன்தாரா என்பதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கேக் வெட்டி சர்ப்ரைஸ் அளித்த நயன்தாரா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து, “வாழ்க்கையில் உண்மையான வெற்றி என்பது நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து கிடைக்கும் அன்பே” என உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.

Source link