நாதக சீமான், இன்று திருத்தணியில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
இன்னும் தேர்தலுக்கு 30 தினங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளும் அதிமுக கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. குறிப்பாக இந்த சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் பட்டிருந்த நிலையில், தற்போது புதியதாக ராமதாஸ் சசிகலா கூட்டணி உருவாகியுள்ளது.இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.மேலும், திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக சீமான் தமிழ் தேசியத்தை கையில் எடுத்துள்ளார்.தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்களிலும் , நாடாளுமன்ற தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தல் சீமானுக்கு முக்கியத் தேர்தலாக பார்க்கப்படுகிறது. ஏன்னென்றால், விஜய் வருகையால், இளைஞர்கள் வாக்குகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் அடிப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சீமான் தன்னுடைய தமிழ் எழுச்சி பேச்சு இளைஞர்களை கவர்ந்தது. அதனை முறியடிக்கும் விதமாக விஜய் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இவங்க மூணு பேருக்கு சீட்டு கன்ஃபார்ம்…டிக் அடித்த ஸ்டாலின்!
நாம் தமிழர் கட்சி தேர்தல் வாக்குறுதிகள்
நாம்தமிழர் கட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அங்கிகரீக்கப்பட்ட கட்சியாகவும் முன்றாவது சக்தியாக இருப்பதால் வாக்கு சதவீதத்தை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் சீமான் தற்பொழுது உள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 19 ஆம் தேதி நாம்தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.இதில் சுமார் 49 தலைப்புகளில் சீமான் தன்னுடைய வாக்குறுதிகளை வெளியிட்டு இருந்தார்.இதில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து, இடஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை, ஆற்று நீரை பயன்படுத்தி குளிர்பானம் தயாரிக்க தடை,60 வயது மதிக்கதக்க விவசாயிகளுக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் உள்ளிட்டவை மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
திருத்தணியில் சீமான் முதற்கட்ட பிரச்சாரம்
இதனைத் தொடர்ந்து நாதக சீமான் இன்று 2026 சட்டமன்ற தேர்தலுகான முதல் பிரச்சாரத்தை இன்று திருத்தணியில் தொடங்க உள்ளார். முன்னதாக திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். மேலும் ஒரு நாளைக்கும் 4 அல்லது 5 இடங்களில் சீமான் பிரச்சாரத்தை மேற்க்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளார். அந்த வகையில் இன்று திருத்தணியில் சீமான் காலை 10.30 மணி அளவில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
கடந்த 2021 சட்டமன்ற் தேர்தலில் நாதக சீமான் சென்னையில் உள்ள திருவொற்றியூரில் தன்னுடைய முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த முறை திருத்தணியில் ஆரம்பித்துள்ளார். குறிப்பாக சீமான் கடவுள் முருகனை தன்னுடைய முப்பாட்டான் என்று கூறி வரும் நிலையில், திருத்தணியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
