அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியடையும் வகையில் தொகுதி பங்கீடு அமையும்: பியூஷ் கோயல்

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. அதை வைத்து பார்க்கும்போது, வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியவில்லை. தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த பியூஸ் கோயலை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன்பின்னர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தொகுதிப்பங்கீடுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதிப் பங்கீட்டு விவரங்களை அறிவிப்போம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும். நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக உள்ளோம். தேர்தல் பிரசாரம் தொடங்கியதும் பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை குறித்து முடிவு செய்யப்படும்.

திமுக அரசின், முடிவு தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் காங்கிரஸை மக்கள் புறக்கணிக்கின்றனர். ஈபிஎஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். திமுகவை எதிர்க்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பியூஸ் கோயல் வருகையால் அ.தி.மு.க. கூட்டணியில் இன்றைக்கு தொகுதி பங்கீடு ஓரளவுக்கு இறுதியாகும் என்று நம்பப்படுகிறது.

Source link