சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தேர்தல் பிரச்சார வியூகம் – சட்டம் ஒழுங்கு பிரச்சனை தான் டார்கெட்! – aiadmk likely to focus on law and order issues for upcoming assembly election campaign

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை வைத்து அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

AIADMK Campaign plan(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்தது இன்னும் 30 நாளில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது கிட்டத்தட்ட ஐந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தற்போது வரை நான்கு முனை போட்டி சூழல் நிலவுவதால் அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றி உறுதி செய்ய போராடி வருகின்றன.

அந்த வகையில் அதிமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து தேர்தல் வேலயில் ஈடுபட்டு வருகிறது.இன்று அதிமுக பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் பொருட்டில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயில் சென்னை வந்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அதிமுக தேர்தல் பிரச்சார வேலைகளும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றன. அதிமுகவின் தேர்தல் பிரச்சார விளம்பரக் குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்ற தேர்தலில் என்ன மாதிரியான பிரச்சார வியூகங்களை முன்னெடுக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது.

இதுவரை அதிமுக மூன்று கட்ட தேர்தல் அறிக்கைகளை அளித்திருக்கிறது. அந்தவகையில் 2026 தேர்தலுக்காக அதிமுக கொடுத்த வாக்குறுதிகளின் சிறப்பம்சங்கள் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தல், ஊடகங்கள் வாயிலாக மக்களிடையே தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்துதல் தொடர்பான யோசனைகள் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், கடம்பூர் ராஜு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பட்டியலின மக்களுக்கெதிரான பிரச்சனை கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளதாக விமர்சித்த அவர் திமுக அரசின் மோசமான ஊழல் நிறைந்த செயல்பாடுகளை விமர்சனம் வைத்து அதிமுக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஓரளவுக்கு அந்த பிரச்சாரத்தில் வெற்றி கண்டார் என சொல்லப்பட்டாலும் திமுக மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்தி இருக்கக்கூடிய anti-incumbency -யை பற்றி பேசி அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளது கவனிக்கப்படக்கூடிய ஒன்றாகும்.’

அச்சத்தில் எடப்பாடி

ஆனால் அதிமுக கள ரீதியாக எந்த அளவுக்கு வலிமையான ஒரு கட்சியாக தன்னை தகவமைத்திருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. கடந்த 10 தேர்தலுக்கு மேல் எடப்பாடி பழனிச்சாமி தோல்வியை சந்தித்து வருகிறார். இந்த சூழலில் 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா சாவா என்கிற ஒரு தேர்தலாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய நான்கு முனை போட்டி என்ற சூழலில் விஜயின் அம்சம் எடப்பாடியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களே எடப்பாடி உடன் பனிப்போரை நிகழ்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சிக்கலை எல்லாம் சமாளித்து எந்த அளவிலான வெற்றியை தேர்தலில் எடப்பாடி நிலைநாட்டப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.