ஆந்திராவில் சோகம்: குரங்குகள் தாக்கியதில் 68 வயது மூதாட்டி உயிரிழப்பு

அமராவதி,

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், உள்ள பெத்திபாலம் கிராமத்தை சேர்ந்த தானபோயின சின்ன புல்லி 68 வயது மூதாட்டி தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளின் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வழக்கம்போல தனது அன்றாட வேலைகளுக்காக தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த குரங்குகள் அவரை திடீரென சூழ்ந்து கொண்டது. குரங்குகள் அவரை ஆக்ரோஷமாக தாக்க தொடங்கின.

குரங்குகளிடம் இருந்த தப்பிக்க ஓடினார். அந்த பதற்றத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு, தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த தாக்குதல் நடந்ததால், இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை எற்படுத்தியது.

Source link