உலகின் விசித்திரமான கிராமப் பெயர்.. சொல்லவே அவமானப்படும் மக்கள்.. பின்னணி காரணத்தை கேட்டா மிரண்டு போய்டுவீங்க! – australia fugging village finally changes its name

​ஒரு குறிப்பிட்ட  நகரில் வசிக்க கூடிய மக்கள் அதன் கிராமத்தின் பெயரைச் சொல்லவே வெட்கப்படுகிறார்கள் . ஏன் இதற்கான காரணம் என்ன தற்பொழுது அந்த கிராமம் எப்படி உள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

america village
ஒரு மனிதரின் அல்லது ஒரு இடத்தின் அடையாளத்தில் பெயர் மிகவும் முக்கியமானதாகும். பல நேரங்களில் அந்த பெயர்கள் தனிப்பட்ட, கலாச்சார, குடும்ப மற்றும் வரலாற்று தொடர்புகளையும் தாங்கி நிற்கின்றன. சில இடங்கள் நதி, மலை அல்லது கோவில் போன்றவற்றின் அடிப்படையில் பெயரிடப்படுகின்றன. ஆனால் ஆஸ்திரியாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் அதன் பெயரால் பல ஆண்டுகள் அவமானத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கிண்டலுக்குள்ளான கிராமம்
கிண்டலுக்குள்ளான கிராமம்

அந்த கிராமத்தின் பழைய பெயர் சமூக வலைதளங்களில் பரவலாக கேலிக்குரியதாக மாறியதால், அங்குள்ள மக்கள் நீண்ட காலம் சிரமத்தை எதிர்கொண்டனர். இணையமும் சமூக ஊடகங்களும் வேகமாக வளர்ந்ததால் இந்த நிலை மேலும் மோசமடைந்தது. இதனால், அந்த கிராமம் 2021ஆம் ஆண்டு தனது பெயரை Fugging என்று மாற்றிக் கொண்டது.

ஆஸ்திரியாவில் இருக்கும் முக்கிய கிராமம்
ஆஸ்திரியாவில் இருக்கும் முக்கிய கிராமம்

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் டிராவல் வ்லாகர்கள் இந்த இடத்தை அதிகமாக பார்வையிடத் தொடங்கினர். அவர்கள் கிராமத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் இருந்த பெயர் பலகைகளுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அந்த இடம் தவறான கவனத்தை பெற்றது.

மனதளவில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்
மனதளவில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்

இதைத் தொடர்ந்து, பல பெயர் பலகைகள் திருடப்பட்டன. இதனால் உள்ளூர் நிர்வாகம் புதிய பலகைகளை உயரமாக பொருத்தி, திருட முடியாத வகையில் கான்கிரீட்டில் பதித்தது. மேலும், அந்த கிராம மக்கள் கூட அந்த பழைய பெயரால் அழைக்கப்பட்டதால், அது அவர்களுக்கு மேலும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது.இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்ததால் கிராமத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

அந்த பெயர் கிராமத்திற்கு வைப்பதற்கான காரணம் என்ன?
 அந்த பெயர் கிராமத்திற்கு வைப்பதற்கான காரணம் என்ன?

தற்போது Fugging என அழைக்கப்படும் இந்த கிராமம் சால்ஸ்பர்க் அருகிலும் ஜெர்மனி எல்லைக்கு அருகிலும் உள்ள டார்ஸ்டார்ஃப் நகராட்சிக்குள் அமைந்துள்ளது.வரலாற்று தகவல்களின்படி, இந்த கிராமம் சுமார் 1070ஆம் ஆண்டில் குடியமர்த்தப்பட்டது. ஒரு உள்ளூர் அரச குடும்பத்தை சேர்ந்த அடல்பெர்ட் வொன் வுக்கிங்கன் என்பவரின் பெயரிலோ அல்லது பழங்கால பவேரிய அரசவம்சத்தை சேர்ந்த ஃபோக்கோ என்ற நபரின் பெயரிலோ இந்த இடம் உருவானதாக கூறப்படுகிறது.