ஈரான் அணு உலை மீது 5 நாட்களுக்கு தாக்குதல் இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு

நியூயார்க்

மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

Also Read
பாரசீக வளைகுடா-ஹார்மூஸ் ஜலசந்தி நோக்கி 2 இந்திய சரக்கு கப்பல்கள் பயணம்
ஈரான் அணு உலை மீது 5 நாட்களுக்கு தாக்குதல் இல்லை:  டிரம்ப் திடீர் அறிவிப்பு

ஆனால், 3 வாரங்களுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் வலைதள பதிவில் இன்று வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவும் ஈரானும் கடந்த 2 நாட்களாக மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மத்திய கிழக்கில் நம்முடைய பகைமைக்கு முற்றிலுமொரு தீர்வு காணப்பட உள்ளது.

இந்த விரிவான, பயனுள்ள பேச்சுவார்த்தை வாரம் முழுவதும் தொடர கூடும். அதனடிப்படையில், ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று போர் துறைக்கு நான் உத்தரவிட்டு உள்ளேன்.

நடந்து வரும் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார். இதில், கவனம் செலுத்திய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Source link