சென்னை,
தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து மளமளவென குறைந்து வந்தது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எந்த அளவுக்கு ஏற்றம் கண்டதோ, அதே அளவுக்கு இறங்கியது. அந்த வகையில் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360-ம், பிற்பகலில் சவரனுக்கு ரூ.2,240-ம் என இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு இன்று ஒரே நாளில் ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.12,670-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறையாக மாற்றம் கண்டுள்ளது. காலை மற்றும் பிற்பகலில் குறைந்த தங்கம் விலை, மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.670 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று காலையில் கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாலையில் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
