வெளிநாடு போக ஆசையா? இந்திய ரூ.1000 இங்கு 3 லட்சமாக மாறும்… இந்த நாடு எது தெரியுமா? – vietnam travel cost for indians

​இந்திய ரூபாய் மதிப்பில் 1000ஆயிரம் ரூபாய் இருந்தால், இந்த நாட்டில் சுற்றுலா செல்ல முடியுமாம். அது எந்த நாடு இது குறித்து விரிவாக பார்க்கலாம். 

வியட்நாம்
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் குறைந்த செலவில் வெளிநாடு சுற்றுலா செல்ல ஆசை இருக்கும் ஆனால் பணிகள் காரணமாக அந்த கனவு பலருக்கு நிறைவேறாமல் போகிறது. ஆனால் சில ஆயிரம் ரூபாயிலிருந்து வெளிநாடு சுற்றிவர முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சுற்றுலா செல்ல மலிவான நாடு
 சுற்றுலா செல்ல மலிவான நாடு

உலக நாடுகளை மலிவான சுற்றுலா நாடுகளில் முக்கியமானது வியட்நாம். இங்கு இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது வியட்நாம் நாணயத்தின் மதிப்பு குறைவாகவே இருப்பதால் இந்தியர்களுக்கு இது மிகவும் சுலபமான சுற்றுலா தளமாக உள்ளது. தற்பொழுது, இந்தியாவின் 1 ரூபாய் சுமார் 280 முதல் 290 வியட் நாம் டொங்கிற்கு சமமாக உள்ளது. இதனால் குறைந்த பணத்திலேயே அங்கு அதிக செலவுகளை சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

​ குறைந்த செலவில் வெளிநாடு சுற்றுலா
 <strong>​  குறைந்த செலவில் வெளிநாடு சுற்றுலா</strong>​

அதேபோல், இந்திய ரூபாயின் பல ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு வியட்நாமுக்கு சென்றாலும் தங்குமிடம் உணவு சுற்றுலா செலவுகள் போன்றவை எளிதாக கவனித்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தெருவோர உணவுகள் வியட்நாமில் மிகவும் பிரபலமானவை குறைந்த விலையில் சுவையான நூடுல்ஸ்கள், கடல் உணவுகள் மற்றும் பல்வேறு உள்ளூர் உணவுகளை அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது .

இயற்கை அழகிலும் சிறந்தது
 இயற்கை அழகிலும் சிறந்தது

அது போல ஹோட்டல் மற்றும் போக்குவரத்து செலவுகளும் இந்தியாவில் பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருக்கும்.வியட்நாம் மலிவான நாடு மட்டுமல்ல இயற்கை அழகிலும் சிறந்து விளங்குகிறது அழகிய மலைப்பகுதிகள் நீர்நிலைகள் பழமையான கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை அதிகம் இருக்கக்கூடிய இடமாகவும் உள்ளது.

வியட்நாமில் குவியும் சுற்றுலா பயணிகள்
வியட்நாமில் குவியும் சுற்றுலா பயணிகள்

வியட்நாமிற்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர்.வியட்நாம் என்றாலே ஹாலோன் வளைகுடா போன்ற இடங்களை கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது அதேபோல வியட்நாம் தலைநகரான ஹனோயிலும் பழமையான கோவில்கள் சந்தைகள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் காண முடியும்.

டிசம்பர் மாதம் வியட்நாம் செல்ல ஏற்ற மாதம்
 டிசம்பர் மாதம் வியட்நாம் செல்ல ஏற்ற மாதம்

ஆண்டு முழுவதும் வியட்நாமுக்கு செல்ல முடியும் என்றாலும் டிசம்பர் முதல் ஜனவரி வரை செல்லும் காலம் சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது அதே நேரத்தில் வானிலை நன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது மேலும் அதே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.