சமரசம் செய்துகொண்ட இடதுசாரிகள்?- திமுக கூட்டணியில் சிபிஎம்-க்கு 5 இடங்கள் – cpi(m) gets 5 seats in the dmk alliance

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPIM) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

CPIM in DMK alliance(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்கிய முன்னேற்றமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)க்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடதுசாரிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இடம்

திமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், CPI(M)-க்கு வழங்கப்பட்ட இந்த 5 தொகுதிகள், கூட்டணியின் சமநிலையை நிலைநிறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் இடதுசாரிகள் வழங்கிய ஆதரவை கருத்தில் கொண்டு இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் 200+ இலக்கும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பும்

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுயேச்சையாக 200 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தார். இது கூட்டணிக் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக போன்ற கட்சிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. திமுக அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதால், தங்களின் தொகுதிகள் குறைக்கப்படலாம் என அவர்கள் ஆரம்பத்திலேயே கணித்தனர்.

எந்த கூட்டணிக்கு செல்வாக்கு அதிகம்? களத்தில் முந்துவது யார்?

சிபிஎம்-மின் நிலைப்பாடு மற்றும் ஆரம்பகட்ட கோரிக்கை

கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்ற சிபிஎம், இந்த முறை தனது செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கூறி 10 முதல் 12 தொகுதிகள் வரை கேட்டது. குறிப்பாகத் தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ள திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை பகுதிகளில் கூடுதல் இடங்களை அவர்கள் எதிர்பார்த்தனர்.

திமுகவின் ‘பார்முலா’ மற்றும் பேச்சுவார்த்தை குழு

திமுக அமைக்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு (கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் அடங்கிய குழு), சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவுடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

திமுகவின் வாதம்

புதிதாகப் பல கட்சிகள் கூட்டணிக்கு வர விரும்புகின்றன, மேலும் நாங்கள் 170+ இடங்களில் போட்டியிட வேண்டும். எனவே, பழைய கூட்டணிக் கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும்.

சிபிஎம் பதில்

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் எங்களின் பங்கு அதிகம், எனவே தொகுதிகளைக் குறைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இறுதி உடன்பாடு- 5 தொகுதிகள் ஒதுக்கீடு

நீண்ட இழுபறிக்குப் பிறகு, மார்ச் 23 இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த இறுதிப் பேச்சுவார்த்தையில் சிபிஎம்-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இம்முறை ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெற்றி வாய்ப்புள்ள அடிப்படையில் இந்த 5 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

சிபிஎம் ஒப்பந்தம் – முக்கிய சிக்னல்

கொள்கை பிடிப்புள்ள சிபிஎம் 5 தொகுதிகளுக்கு சம்மதித்திருப்பது, திமுக கூட்டணியில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. இது கூட்டணியில் திமுக நிர்ணயிக்கும் வரம்புகளை வெளிப்படுத்துகிறது.

மற்ற கட்சிகளுக்கு தாக்கம்

இந்த நிலையில், VCK போன்ற கட்சிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களை கோருவது கடினமாகியுள்ளது. சிபிஎம் ஒப்பந்தம், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கையாகும் என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றன்றனர்.