சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தொடர்பு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, தொடர்பான பணிகளுக்காக, பிரதாப் சிங்கை சிறப்பு பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவரின் தொடர்பு விவரங்கள் பின்வருமாறு;-
பெயர் – பிரதாப் சிங்
பதவி – சிறப்பு பார்வையாளர், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026
அலுவலக முகவரி – அறை எண் 412, இணைப்பு கட்டிடம், ஆயகர் பவன்,சென்னை
தொடர்பு எண்கள் – அலுவலகம்: 044 28338378 கைபேசி: 7845321461
மின்னஞ்சல் – sp***********@****ov.in
தொடர்பு அலுவலர் – ஜெகன் மோகன், கைபேசி: 9551322999
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விவரங்கள் வாயிலாகச் சிறப்புப் பார்வையாளரை தொடர்புகொள்ளலாம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
