மயிலாப்பூர் முதல் கும்பகோணம் வரை..கோவில் தொகுதிளை டார்கெட் செய்யும் பாஜக! – bjp submits list for 27 constituencies targeting temple cities

அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கக்கூடிய சூழலில், 27 தொகுதிகளுக்கான உத்தேசப்பட்டியலை வழங்கியுள்ளது பாஜக.

BJP Submits List for 27 Constituencies(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில்தான் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. மயிலாப்பூர் முதல் கும்பகோணம் வரை..கோவில் தொகுதிளை டார்கெட் செய்யும் பாஜக!

11 மாதங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணி

தேர்தல் நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு முன்பே பாஜக அதிமுக இணைந்து கூட்டணி அமைத்தது. ஆரம்ப காலங்களில் பொருந்தா கூட்டணி எனக்கு விமர்சிக்கப்பட்ட இது பின்னாளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அன்புமணி தரப்பு பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இறுதி வடிவத்தை பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திமுக பக்கம் சென்று சேர்ந்ததால் பாமக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்ததை விட கூடுதல் சீட்டுகளை பெறப்போகின்றன. இதற்கிடையில்தான் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்திருக்கிறார். நேற்று முதல் தொடர்ந்து வந்த பேச்சுவார்த்தையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாஜகவின் உத்தேச பட்டியலில் 27 தொகுதிகள்

இதற்கிடையில் பாஜக 27 விருப்பத்தொகுதிகளை பட்டியலிட்டு அதிமுக தலைமையிடம் அளித்திருக்கிறது. அதில் வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர், வானூர், திருச்செங்கோடு, அந்தியூர், பழனி, திருப்பூர், தெற்கு, சூலூர், அரவக்குறிச்சி, ராசிபுரம், குன்னூர், தளி, மொடக்குறிச்சி, கோயம்புத்தூர், வடக்கு மதுரை தெற்கு, சிங்காநல்லூர், குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோயில், விளவங்கோடு, மயிலாடுதுறை, சாத்தூர் திருச்செந்தூர், திருநெல்வேலி, திருத்தணி, கும்பகோணம், ஆகிய 27 தொகுதிகளை விருப்பத்தொகுதிகளாக நிர்ணயித்திருக்கிறது பாஜக.

கோவில் நகரங்களை குறி வைக்கும் பாஜக

ஆரம்பகட்டத்தில் இருந்தே பாஜக அதிமுகவிடம் கோவில் அதிகமாக இருக்கக்கூடிய தொகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் தங்களின் மதவாத சித்தாந்தம் கோவில் தொகுதிகளில் தேர்தல் சமயத்தில் அதிகமாக பயன்தரும் என அவர்கள் நம்புவதாகவும் சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் நடந்த திருப்பரங்குன்ற விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது. அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும்போது திருப்பரங்குன்றம் முருகனை வழிபட்டுச் சென்றார். பாஜகவின் மதவாத சித்தாந்தம் கோவில் தொகுதிகளில் கை கொடுக்கும் என நம்புகின்றனர். மேலும் பாஜக கொடுத்துள்ள உத்தேச பட்டியலை பார்த்தால் திருச்செந்தூர், திருநெல்வேலி, திருத்தணி, கும்பகோணம், பழனி, திருச்செங்கோடு, சென்னையில் உள்ள மயிலாப்பூர் இவை அனைத்தும் கோவில்கள் பிரசித்தி பெற்ற தொகுதிகளாகவே உள்ளன.

காரசார விவாதம்! சிக்கலில் அட்மட்;அடித்து ஆடும் bjp

ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த கோவில் நகரத்திலும் பாஜக வலிமையான கட்சியாக உருவெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக வலிமையாக இருக்கக்கூடிய தொகுதிகள்

தமிழகத்தில் பாஜக கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருக்கிறது. அந்த பகுதியில் தான் வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதோடு கன்னியாகுமரி நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்து வருகிறது.

சிங்காநல்லூரில் அண்ணாமலை போட்டியிடுகிறாரா

ஏற்கனவே சிங்காநல்லூர் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என பேச்சுக்கள் நிறைந்தன அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் அண்ணாமலை தனது ஆதரவாளர்களை திரட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருந்தார். இந்த சூழலில்தன் பாஜகவின் உத்தேச பட்டியலில் சிங்காநல்லூர் தொகுதி இடம் பெற்று இருப்பது கவனம் பெறுகிறது.