புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஐ.பி.எல்.-ல் கடைசி நேரத்தில் விலகும் அல்லது தாமதமாக அணியுடன் கைகோர்க்கும் வெளிநாட்டு வீரர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
‘பல் வேறு காரணங்களால் சில வெளிநாட்டு வீரர்கள் தொடக்கத்தில் ஐ.பி.எல். அணித் தேர்வுக்கு தயாராக இருக்கமாட்டார்கள் என கேள்விப்படுகிறோம். ஏலத்திற்கு முன்பு எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல், இப்போது தனிப்பட்ட காரணத்துக்காக வரமாட்டோம் அல்லது தாமதமாக வருகி றோம் என்று சொல்வது அணியின் ஒட்டுமொத்த திட்டத்தையும் சீர்குலைத்து விடும். அணி உரிமையாளர்கள் இந்த விவகாரத்தை கடுமையாக எடுத்துக் கொண்டு, தங்களுக்கு விருப்பமான நேரத்தில் வரும் வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும். அப்போது தான் இத்தகைய பிரச்சி னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
சில சமயம் அணி உரிமையாளர்கள் வீரர்களுக்கு மட்டுமின்றி அவர்க ளது குடும்பத்தினருக்கும் சகல வசதி வாய்ப்புகளையும் சொந்த செல வில் செய்து கொடுக்கிறார்கள். இது இந்தியர்களின் விருந்தோம்பல். ஆனால் இதை சில வெளிநாட்டு வீரர்கள் தங்களுக்கான உரிமை என்று தவறாக புரிந்து கொண்டு அந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்ப டுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.’ என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
