அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசையில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்

கராச்சி

2025-ம் ஆண்டில் அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசை பட்டியலை சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனம் மேற்கொண்டு அதற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில், அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசையில் பாகிஸ்தான் முதல் இடம் பிடித்துள்ளது.

அதற்கடுத்து வங்காளதேசம் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு, ஒரு கன மீட்டரில் 5 மைக்ரோ கிராம் எடைக்கும் குறைவான பிஎம்2.5 துகள்களை நாடுகள் கொண்டிருக்க வேண்டும் என்று வரம்பு நிர்ணயித்து உள்ளது. இதனை 13 நாடுகள் கடைபிடித்து வருகின்றன.

Also Read
மேற்காசிய மோதல்; போர்நிறுத்த ஒப்பந்தமும், பேச்சுவார்த்தையுமே ஒரே தீர்வாக இருக்கும்: சீனா
அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசையில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான்

இதனால், 2024-ம் ஆண்டுடன் (7 நாடுகள்) ஒப்பிடும்போது இந்த நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எனினும், மொத்தம் கண்காணிக்கப்பட்ட 143 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 130-ல் உலக சுகாதார அமைப்பின் காற்று தர வழிகாட்டி மதிப்புக்குள் வர தவறி விட்டன. ஆனால், இந்த வரம்புக்குள் ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, எஸ்தோனியா மற்றும் பனாமா நாடுகள் உள்ளன.

பல தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இதில் முன்னேற்றம் கண்டுள்ளன. லாவோஸ், கம்போடியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை பெருமளவில் பிஎம்2.5 துகள்களின் அளவை குறைத்துள்ளன. முந்தைய ஆண்டை விட 2025-ம் ஆண்டில், ஒட்டுமொத்தத்தில் 75 நாடுகள் பிஎம்2.5 துகள்களின் அளவை குறைத்துள்ளன. 54 நாடுகளில் மாசுபாடு அளவு அதிகரித்து உள்ளது.

சமீபத்தில் வெளியான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டில் பாகிஸ்தான் முதல் இடம் பிடித்து இருந்தது. உலக அளவில் 163 நாடுகளில் பயங்கரவாத தாக்கம் தொடர்பாக பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் விரிவான ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், 2025-ம் ஆண்டில் பாகிஸ்தானில் 1,139 பயங்கரவாதம் தொடர்பான மரணங்களும், 1,045 பயங்கரவாத சம்பவங்களும் நடந்துள்ளன என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அதிக மாசடைந்த நாடுகளின் தர வரிசையிலும் பாகிஸ்தான் முதல் இடம் பிடித்துள்ளது.

Source link