நியூசிலாந்து அருகே உள்ள டோங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு அருகே உள்ளது டோங்கா தீவு. மொத்தம் 171 தீவுகளை உள்ளடக்கிய இந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகர்மான நெயாபு பகுதியில் 235 கி.மீ ஆழத்தில் 7.6 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

இங்குள்ள ஹிஹிபோ பகுதியில் 6.2. ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Source link