ப.சிதம்பரம் கோட்டையில் சவால் விடும் சீமான்..-காரைக்குடி ஹாட் ஸ்பாட் -கூட்டணி உள்ளே கடும் போட்டி! – seeman contesting karaikudi sivagangai election political scenario

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக திமுக அதிமுக கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட்டு பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலத்தில் ஒரே மேடையில் 234 சட்டமன்ற வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் அறிவித்தார். இதனை தொடர்ந்து திருத்தணியில் நேற்று முதல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் சீமான் காரைக்குடியில் களமிறங்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது கள நிலவரம் என்ன என்பது குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். காரைக்குடி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மாங்குடி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் உட்கட்சி மோதல் காரணமாக திமுகவில் நெருக்கடிகளை மீறி தன் ஆதரவாளர் மாங்குடிக்கு சீட் வாங்கி கொடுத்தவர் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி ப. சிதம்பரம்.

கூட்டணி தர்மம் எங்கே_ ஏமாற்றத்தில் விசிக_

தற்பொழுது தனக்கு தான் மீண்டும் சீட் என்று முழு நம்பிக்கையுடன் சிட்டிங் எம் எல் ஏ மாங்குடி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், இந்த முறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதால் அந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறி உள்ளது. எங்கோ ஒரு தொகுதியில் போட்டியிட்டாலே ப. சிதம்பரம் போன்றோரின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் சீமான், ப.சிதம்பரத்தின் சொந்த தொகுதியான காரைக்குடியில் போட்டியிடும் போது சிதம்பரத்தை விட்டு வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இத்தனை ஆண்டு காலம் அமைச்சர் ,எம் பி என பல்வேறு பொறுப்புகளில் இருந்தும் தொகுதிக்கு எதையுமே செய்யவில்லை என்பதை புள்ளி விவரங்களுடன் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ,சிதம்பரத்தை டார்கெட் செய்ய இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீமான் யார் போட்டியிட்டாலும் இந்த முறை காரைக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் களம் இறக்கப்படுவது உறுதி என அறிவாலயம் தலைமை திட்டவட்டமாக கூறி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.
இதற்கிடையில் மாங்குடியாவது,மசினகுடியாவது என்று சொல்லி அமைச்சர் பெரிய கருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவனுக்கு நம்பிக்கையான திமுகவை சேர்ந்த காண்ட்ராக்டர் ஒருவர் சீட் வாங்கிய ஆக வேண்டும் என்ற முடிவில் திமுகவினர் சென்னை அறிவாலயத்துக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலில் ரூம் போட்டு காத்துக்கொண்டிருந்தனர். இது தவிர திமுக இளைஞரணி மகளிர் அணி உட்பட பல்வேறு நிர்வாகிகளும் தங்களுக்கே சீப் வழங்க வேண்டும் என்று தலைமை நெருங்கி வருகின்றன.

ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகளோ இம்முறை காரைக்குடி மட்டுமல்ல சிவகங்கையும் எங்களுக்கு தான் என்று சொல்லி கையை உயர்த்த இருக்கின்றனர்களாம். அதே நேரத்தில் திமுகவுக்கு காரைக்குடி தரமான வேட்பாளர் என்பதையும் தங்கள் தரப்புக்காக பலம் என்று காங்கிரசார் சொல்லிக் கொண்டு வருகிறார்களாம். இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறியதாவது எங்களுக்கு தான் மீண்டும் சீட் கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் சொந்த தொகுதியான காரைக்குடியை விட்டுத்தர தலைவர் முன்வர மாட்டார் தவிர, தற்பொழுது காங்கிரஸ் எம்எல்ஏ மீது பொதுமக்கள் எந்த அதிருப்தியும் இல்லை. கூடுதலாக சிவகங்கையும் கிடைத்துள்ளதால் அங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

Source link