Selvaperunthagai Constituency,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொகுதி மாற இருப்பதாக தகவல் – selvaperunthagai may change his constituency from sriperumbudur to chennai egmore

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தொகுதி மாற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கடந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நின்றார். இம்முறை சென்னை எழும்பூர் தொகுதிக்கு அவர் மாற இருப்பதாக தகவல்

முக்கிய அம்சங்கள்:

தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை

சென்னை எழும்பூர் தொகுதிக்கு மாறுவதாக தகவல்

selvaperunthagai constituency
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தொகுதி மாற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இம்முறை தொடருமா ? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீட்டில் மிகப்பெரிய இழுபறி இருந்ததாக தெரிந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் இவர்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்தார்கள். கடந்த முறையை விட இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி வழங்க திமுக முடிவெடுத்தனர். 28 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே மீண்டும் தொடர்கின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் காங்கிரசிற்கு மட்டும் அதிகமான தொகுதிகளை வழங்கிவிட்டு எங்களுக்கு மிக குறைவான தொகுதிகளை வழங்குவதாக கூறினார்களாம்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகைதன் வருத்தத்தை தெரிவித்தார். காங்கிரஸ் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை, நாங்கள் முதலில் 100 தொகுதிகளில் போட்டியிட்டோம். அது படிப்படியாக குறைந்து 21 தொகுதிகளானது. அதன் பிறகு தற்போது 28 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பினை பெற்றுள்ளோம். எங்களுடைய வேதனையை தோழமை காட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். கூடுதல் தொகுதிகளை கேட்பது உங்களுடைய உரிமை.
ஆனால் எங்களை ஒப்பிட்டு கேட்காதீர்கள் என்றார் செல்வப்பெருந்தகை. இந்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொகுதி மாற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து எழும்பூர் தொகுதிக்கு செல்வப்பெருந்தகை மாற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
எழும்பூர் தொகுதி திமுகவிடம் தான் உள்ளது. அந்த தொகுதியை தற்போது காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக்கொடுக்க முன்வந்து இருப்பதாக தெரிகின்றது. மேலும் சென்னை எழும்பூர் தொகுதி விசிக விருப்ப பட்டியலில் இடம்பெற்ற தொகுதியாம். சமீபத்தில் விசிக தங்களது விருப்பப்பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளனர். அந்த விருப்ப பட்டியலில் சென்னை எழும்பூர் தொகுதி இடம்பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஆனால் இது உறுதியான தகவல் இல்லை. குறிப்பாக செல்வப்பெருந்தகை தொகுதி மாறுவதாக இருப்பதாக வந்த தகவலும் உறுதியா என்பது தெரியவில்லை. அவர் தொகுதி மாறினாலும் மாறலாம் என்பது போல தான் பேச்சுக்கள் போய்க்கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் உறுதியாக மாறுகிறாரா ? என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
இந்நிலையில் ஏற்கமாவே விசிககட்சியினர் தொகுதிப்பங்கீட்டில் முழு திருப்தியில் இல்லை என தகவல்கள் வருகின்றன. விசிக கட்சிக்கு திமுக எட்டு தொகுதிகளை வழங்கியிருக்கின்றனர். ஆனால் விசிக திமுகவுடன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்தனர். மேலும் ஒரு ராஜ்ய சபா சீட்டையும் கேட்டிருந்தனர்.ஆனால் தற்போது விசிக எட்டு தொகுதிகளை தான் பெற்றுள்ளனர். இருந்தாலும் எண்ணிக்கைக்காக கொள்கையை விட்டு கூட்டணியில் இருந்து விலகும் கட்சி விகிக அல்ல, மனநிறைவுடன் கூட்டணியில் தொடர்கின்றோம் என்றார் திருமாவளவன்.
இந்நிலையில் அவர்கள் விருப்ப பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்குவார்களா ? அப்படி வழங்கினால் திருமாவளவனின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது. ஏற்கனவே எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள், திருமாவளவனுக்கு மிகவும் சொற்பமான தொகுதிகளையே திமுக வழங்குகின்றனர். புதிதாக வந்த கட்சிகளுக்கு எல்லாம் திமுக வாரி வழங்கி வருகின்றனர்.

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம் – CPM சண்முகம் பேட்டி

ஆனால் திருமாவளவனுக்கு உரிய தொகுதிகளை அவர்கள் வழங்கவில்லை என விமர்சித்து வருகின்றனர். இப்படியான நிலையில் அவர்களின் விருப்பப்பட்டியலில் இருக்கும் தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக வழங்குவார்களா ? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுகின்றது. ஆனால் திருமாவளவன் கூட்டணியின் வெற்றி தான் முக்கியம் என இருப்பதால் இதற்கு உடன்படவும் வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.